Identify Milk adulteration | ஊட்டச்சத்து மிக்க பால் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது. பிறந்த குழந்தைக்கு பால் தான் பிரதான உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணும் ஊட்டச்சத்து மிக்க திரவ ஆதாரமாக இருக்கும் இதில் கலப்படம் செய்யப்படுகிறது. வேதிப்பொருள் கலப்படம் செய்யப்படுவதால், அந்த பாலை குடிப்பவர்களுக்கு பெரிய பிரச்சனைகள் வர அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால், பாலில் கலப்படம் இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
பாலில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் என்ன?
பாலில் சுமார் 150 கலோரிகள், 8 கிராம் புரதம், 8 கிராம் கொழுப்பு, 12 கிராம் கார்போஹைட்ரேட், 300 mg கால்சியம், 2.5 mg வைட்டமின் D, 1.2 mcg வைட்டமின் B12, 0.4 mg Riboflavin B2 மற்றும் சுமார் 400 mg பொட்டாசியம் உள்ளது.
பாலில் என்னவெல்லாம் கலப்படம் செய்ப்படும்?
பாலில் பொதுவாக தண்ணீர், சவர்க்காரம், ஸ்டார்ச், யூடியா, செயற்கை பால், ஃபார்மலின், கலரிங் ஏஜெண்டுகள் கலப்படம் செய்யப்படுகிறது. செயற்கை இனிப்புகள் கூட இதில் சேர்க்கப்படுகின்றன.
மேலும் படிக்க | கலப்படம் மஞ்சளை ஒரு நொடியில் கண்டுபிடிப்பது எப்படி? சிம்பிள் டிப்ஸ்
பாலில் ஏன் கலப்படம் செய்கிறார்கள்?
பாலின் தேவை மிகவும் அதிகம். அதேபோல் பால் விற்பனையில் லாபமும் அதிகம் என்பதால் தினசரி தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பாலில் கலப்படம் செய்கிறார்கள். அதிக லாபம் வேண்டும் என்பதற்காக பாலில் கலப்படம் செய்து விற்பனை செய்கிறார்கள்.
கலப்பட பால் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்?
சவர்க்காரம் உள்ளிட்டவை கலக்கப்படும் பாலை குடிக்கும்போது வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் வாந்தியை ஏற்படும். யூரியா மற்றும் ஃபார்மலின் போன்ற கலப்படங்கள் சிறுநீரக பிரச்சனைகளை ஏற்படுத்தும். தொடர்ச்சியாக குடித்தால் சிறுநீரகம் செயலிழப்பு ஆக கூட வாய்ப்பு இருக்கிறது. இதுதவிர தோல் வெடிப்பு, அரிப்பு அல்லது சுவாச பிரச்சனைகள் ஏற்படலாம். ஃபார்மலின் சேர்மம் கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். சில கலப்படங்கள் உடலில் ஹார்மோன் சமநிலையை சீர்குலைத்து, பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். சிறுநீரக நோய் மற்றும் புற்றுநோய் ஆபத்தும் அதிகரிக்கும்.
பால் கலப்படத்தை கண்டுபிடிப்பது எப்படி?
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) படி, வீட்டிலேயே பாலின் தூய்மையை சரிபார்க்கலாம். 2-3 மிலி பாலை கொதிக்க வைத்து ஆறவிடவும். பாலில் 2-3 சொட்டு அயோடின் கரைசலை சேர்க்கவும். பால் சுத்தமானதாக இருந்தால், நிறம் மாறாமல் இருக்கும் அல்லது சிறிது மஞ்சள் நிறமாக மாறும். அது நீலமாக மாறினால், அந்த பால் மாவுச்சத்துடன் கலப்படம் செய்யப்படுகிறது.
சோப்பு கலப்படம் சோதனை
இந்த சோதனைக்கு, ஒரு கிளாஸில் 5 மில்லி பாலை எடுத்து, சம அளவு தண்ணீர் சேர்க்கவும். நன்றாக குலுக்கவும். சுத்தமான பால் என்றால் நுரை இருக்காது. அல்லது கொஞ்சம் நுரை இருக்கலாம். அதிகமாக இருந்தால் கலப்படம் செய்யப்பட்ட பால் என புரிந்து கொள்ளுங்கள். சவர்க்காரத்துடன் கலப்படம் செய்யப்பட்ட பாலில் நுரை அதிகமாக இருக்கும்.
யூரியா கலப்பட சோதனை
இந்த சோதனைக்கு, ஒரு சோதனைக் குழாயில் 5 மில்லி பாலை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சம அளவு சோயாபீன் அல்லது அர்ஹர் தூள் சேர்க்கவும். நன்றாக குலுக்கி, 5 நிமிடங்கள் வைக்கவும். சிவப்பு லிட்மஸ் காகிதத்தை அதில் நனைக்கவும். சிவப்பு லிட்மஸ் காகிதம் சிவப்பு நிறமாக இருந்தால், பால் தூய்மையானது, அது நீலமாக மாறினால், பாலில் யூரியா கலப்படம் செய்யப்பட்டுள்ளது என அர்த்தம்.
ஃபார்மலின் கலப்படம் கண்டுபிடிப்பது எப்படி?
ஒரு சோதனைக் குழாயில் 10 மில்லி பாலை எடுத்து, 2-3 துளிகள் செறிவூட்டப்பட்ட சல்பூரிக் அமிலத்தை சோதனைக் குழாயின் ஓரங்களில் சேர்க்கவும். பாலின் நிறம் மாறாமல் இருந்தால், பால் தூய்மையானது. ஊதா அல்லது நீல நிற வளையங்கள் ஏற்பட்டால், பால் ஃபார்மலின் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | குஷ்பூ சொன்ன கேரட் துருவல் எண்ணெய்! முகத்தில் தேய்த்தால் என்ன பலன் கிடைக்கும்?
செயற்கை பால் சோதனை
ஒரு சோதனைக் குழாயில் 5 மில்லி பால் மற்றும் 5 மில்லி தண்ணீர் சேர்க்கவும். நன்றாக அசைக்கவும். நுரை உருவாக்கவில்லை என்றால், பால் தூய்மையானது. அது தொடர்ந்து நுரையை உருவாக்கினால், அது செயற்கை சவர்க்காரங்களால் கலப்படம் செய்யப்படுள்ளது ஆகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ