பிரதமர் நரேந்திர மோடியின் பிரான்ஸ், போர்ச்சுகல் பயணம் ரத்து

இந்தியாவில், COVID-19 இன் இரண்டாவது அலை தொடங்கி, கடந்த சில நாட்களில் இருந்து 2.5 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 20, 2021, 11:20 AM IST
  • பிரதமர் மோடி வங்க தேசத்தில் 50 வது சுதந்திர ஆண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்க பங்களாதேஷ் சென்றிருந்தார்
  • பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும் இந்தியாவுக்கான பயணத்தை இரண்டாவது முறையாக நிறுத்தி வைத்திருந்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிரான்ஸ், போர்ச்சுகல்  பயணம் ரத்து title=

நாடு முழுவதிலும், கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தொடங்கி, தொற்று பாதிப்புகள் மிக வேகமாக பரவி வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு தேசிய அளவில் தொடர்ந்து, ஒரே நாளில் 2.5 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது பதிவகியுள்ளது. 

கோவிட் -19 தொற்று பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் (PM Narendra Modi) போர்ச்சுகல் மற்றும் பிரான்ஸ் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 20, 2021) ஜீ நியூஸுக்கு (Zee News) கிடைத்த ஆதாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

மே 8 ம் தேதி நடைபெறவிருந்த 16 வது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டிற்காக பிரதமர் மோடி போர்ச்சுகலுக்கு செல்லவிருந்தார், அதைத் தொடர்ந்து அவர் பிரான்ஸ் நாட்டிற்கும் செல்லவிருந்தார். இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு இப்போது வீடியோ கான்பரெஸிங் வாயிலாக நடக்கும் என கூறப்படுகிறது

ALSO READ | கொரோனா பரவல் எதிரொலி; வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி நடைபெறுமா?

சென்ற வருடமும், பிரதம மந்திரி மோடி தனது பிரஸ்ஸல்ஸ் பயணத்தை ஒத்தி வைக்க வேண்டியிருந்ததால், ஜூலை 2020இல் நடைபெறவிருந்த, 15 வது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் வீடியோ கான்பரெஸிங் வாயிலாக நடைபெற்றது

திங்களன்று, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும் இந்தியாவுக்கான பயணத்தை இரண்டாவது முறையாக நிறுத்தி வைத்திருந்தார்.

ஏப்ரல் 25 ஆம் தேதி ஜான்சன் இந்தியாவுக்கு வருகை தருவதாக இருந்தார். முன்னதாக அவர் ஜனவரி 26 அன்று குடியரசு தின கொண்டாட்டங்களின் முக்கிய விருந்தினராக கலந்து கொள்ள் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் மோடி வங்க தேசத்தில்  50 வது சுதந்திர ஆண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்க பங்களாதேஷ் சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ALSO READ | Corona இரண்டாம் அலை: ICSE வாரியம் 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News