182 சட்டசபை தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலுக்கான வாக்குபதிவு இன்று (டிசம்பர் 9-ம்) மற்றும் 14-ம் தேதி என 2 கட்டமாக நடைபெற உள்ளது.
பாஜக-வின் கோட்டை என கருதப்படும் குஜராத்தில், இன்று முதற்கட்ட வாக்குபதிவு துவங்கியது.
ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜக-வும் அந்தக் கட்சியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் பல யுக்திகளை கையாண்டு வருகின்றன.
நாடு முழுவதும் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த தேர்தல் அனைவரது கவணத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த தேர்தலில் முதற்கட்டமாக இன்று 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இதற்கான வாக்குபதிவு காலை 8 மணி முதல் துவங்கியது, மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து செல்கின்றனர்.
இன்றைய தேர்தலுக்காக 24 ஆயிரத்து 689 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வரும் 14-ம் தேதி 2 கட்ட வாக்குபதிவு மீதமுள்ள 93 தொகுதிகளில் நடைப்பெறும். இதனையடுத்து இந்த வாக்குகள் எண்னும் பணி வரும் 18-ஆம் தேதி நடைப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது!
27,158 EVMs being used in 24,689 polling stations in the first phase of #GujaratElection2017 pic.twitter.com/aHms4fnzeF
— ANI (@ANI) December 9, 2017
இன்றைய வாக்குப்பதிவில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க வாக்க்குச் சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.