மும்பை தாக்குதலின் போதே சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தப் போவதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. ஆனால் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அதை தடுத்துவிட்டது.
சுமார் ரூ.40 ஆயிரம் கோடி கன்னியாகுமரிகுமரி மாவட்ட மக்களுக்கான பல்வேறு நல திட்டங்களை துவக்கி வைக்க பாரத பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரிகுமரி மாவட்டம் வந்தடைந்தார். இந்தவிழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசினார். அப்போது, மும்பை தாக்குதல் குறித்து அவர் பேசியதாவது:-
2004 முதல் 2014 வரை பல்வேறு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடந்தன. டெல்லி, மும்பை, புனேயில் குண்டுகள் வெடித்தன. மக்கள் எதிர்பார்த்ததை அப்போதிருந்த அரசுகள் செய்யவில்லை. இதற்கு மத்திய அரசு பதிலடி கொடுக்கும் என எதிர்பார்த்தும் நடைபெறவில்லை. மும்பை தாக்குதலைத் தொடர்ந்தும் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை பாயும் என எதிர்பார்த்தோம். அப்படி எதுவும் நடக்கவில்லை.
யூரி தாக்குதலுக்கு பிறகும், புல்வாமாவில் தாக்குதல் நடத்திய பிறகும், நமது ராணுவம் பதிலடி கொடுத்தது. மும்பை தாக்குதலின் போதே சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தப் போவதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. ஆனால் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அதை தடுத்துவிட்டது. தற்போது ராணுவத்துக்கு முழுமையான சுதந்திரத்தை நாம் அளித்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.