உலக சுகாதார அமைப்பின் வேண்டுகோளுக்குப் பிறகு, இந்தியா 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள மருத்துவ உதவியை வட கொரியாவுக்கு வழங்கியுள்ளது. வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில், "கொரியா ஜனநாயக மக்கள் குடியரசில் (DPRK) மருத்துவ விநியோக நிலைமை பற்றாக்குறையை இந்தியா உணர்கிறது. காசநோய் எதிர்ப்பு மருந்துகளுக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மனிதாபிமான உதவியை வழங்க இந்தியா முடிவு செய்தது." என்று கூறியுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தற்போதைய காசநோய் தடுப்பு திட்டத்திற்கு மிகவும் தேவையான ஒரு மருத்துவ உதவியாக, வட கொரியாவுக்கு உதவ இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள காசநோய் எதிர்ப்பு மருந்துகளை வட கொரிய அதிகாரிகளிடம் DPRK-வுக்கான இந்திய தூதர் அதுல் மல்ஹாரி கோட்சர்வே உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி முன்னிலையில் ஒப்படைத்தார்.
வட கொரியாவின் மருத்துவமனை திட்டம்
வட கொரியாவில் (North Korea) வெறும் பார்வைக்காக ‘ஷோபீஸ் மருத்துவமனையை’ கட்டிய பல கட்டுமான மேலாளர்களை வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் (Kim Jong Un) விமர்சித்ததாக கூறப்படுகிறது. கட்டுமானத்தில் உள்ள சிக்கல்கள் குறிப்பிடப்படாமல் உள்ளன. ஆனால் அமெரிக்கா மூலம் விதிக்கப்பட்டுள்ள பல பொருளாதாரத் தடைகள் காரணமாக, மூலப் பொருட்களை பெறுவதில் DPRK போராடி வருவதைக் காட்டும் அறிகுறியாக இது இருக்கலாம் என்று அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
அறிக்கையின்படி, கட்டுமானத்தில் உள்ள மருத்துவமனை வளாகத்திற்கு வருகை தந்த கிம் ஜாங் உன், தனது லட்சியத் திட்டம் 'கவனக்குறைவாக' கையாளப்படுவதாகக் குறிப்பிட்டார். மருத்துவமனையின் கட்டுமான மேலாளர்கள், திட்டத்துடன் தொடர்பில்லாத நபர்களை வேலையில் ஈடுபடுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்பணிகளுக்காக கட்டாயப்படுத்தப்படுவதால், இது, மக்களிடையே மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
ALSO READ: கல்வித் துறையிலும் சீனாவின் ஊடுருவல்! உஷாராகும் மத்திய அரசு!!
COVID-19 நோயால் நாட்டில் யாரும் பாதிக்கப்படவில்லை என்று வட கொரியா பலமுறை கூறி வருகிறது. எனினும், இக்கூற்று நிபுணர்களால் சந்தேகிக்கப்படுகிறது. இன்றுவரை, கட்டுமானத்தில் உள்ள புதிய பொது மருத்துவமனைக்கு தொற்றுநோயுடன் எதாவது தொடர்பு உள்ளதா என்பது குறித்த எந்தத் தகவலும் இல்லை.
அறிக்கையின்படி, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் கடுமையான பொருளாதாரத் தடைகள் வட கொரியாவுக்கு பல கட்டுப்பாடுகளை உருவாக்கியுள்ளன. மேலும் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் போது வட கொரியா இந்தத் தடைகளிலிருந்து நிவாரணம் கோரியது. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்தை ஒரு உறுதியான தீர்வை வழங்கத் தவறிவிட்டது.
ALSO READ: COVID-19 தடுப்பூசி தயாரிப்பில் சீனாவுடன் பணியாற்ற தயார்: Donald Trump