IRCTC Booking Update: அடுத்த முறை நீங்கள் ஆன்லைனில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யச் செல்லும்போது, ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) உங்களிடம் பான், ஆதார் அல்லது பாஸ்போர்ட் தகவல்களையும் கேட்கலாம். ரயில்வே டிக்கெட் புக்கிங் தொடர்பாக நடக்கும் மோசடி சம்பவங்களை ஐ.ஆர்.சி.டி.சி முக்கிய மாற்றங்களை கொண்டு வர உள்ளது.
டிக்கெட் முன்பதிவிற்கு IRCTC புதிய அமைப்பு
IRCTC டிக்கெட் புக்கிங்கில் புதிய மாற்றத்தை செய்ய உள்ளது. அதில் நீங்கள் உங்கள் ஆதார்-பான் எண்ணை இணைக்க வேண்டும். ஐ.ஆர்.சி.டி.சி வலைத்தளம் அல்லது செயலி மூலம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, நீங்கள் உள்நுழையும்போது ஆதார், பான் அல்லது பாஸ்போர்ட் எண்ணை உள்ளிட வேண்டும். ரயில்வே டிக்கெட் ஏஜெண்டுகள், ஆன்லைன் டிக்கெட் புக்கிங் முறையை பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
ரயில் டிக்கெட் பான், ஆதார் உடன் இணைக்கப்படும்
அடையாள ஆவணங்களை ஐ.ஆர்.சி.டி.சி உடன் இணைக்கும் திட்டத்தில் ரயில்வே செயல்பட்டு வருவதாக ரயில்வே பாதுகாப்பு படை இயக்குநர் ஜெனரல் அருண்குமார் தெரிவித்தார். முன்னதாக மோசடிக்கு எதிரான நடவடிக்கை மனிதர்கள் கண்டறிந்து செயல்படும் முறையை அடிப்படையாகக் கொண்டது, ஆனால் அந்த நடவடிக்கை, மோசடிகளை தடுக்க போதுமானதாக இல்லை என்று அவர் கூறினார். எனவே, டிக்கெட் முன்ன்பதிவு செய்ய உள்நுழையும்போது அதை பான், ஆதார் அல்லது பிற அடையாள ஆவணங்களுடன் இணைக்க முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் மோசடியை நாம் நிறுத்தலாம்.
ALSO READ | CoWIN: தடுப்பூசி சான்றிதழில் பாஸ்போர்ட் விபரங்களை சேர்ப்பது எப்படி..!!
புதிய முறை விரைவில் அமல் செய்யப்படும்
முதலில் இதற்கான ஒரு நெட்வொர்க்கை உருவாக்க வேண்டும் என்று கூறிய அருண்குமார் ஆதார் தொடர்பான எங்கள் பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. புதிய செயல்முறை அமல்படுத்த விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2019 அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடங்கப்பட்டதாக அருண்குமார் தெரிவித்தார், அதன் பின்னர் மோசடி செய்த 14,257 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை, 28.34 கோடி மதிப்புள்ள போலி டிக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மோசடி விஷயங்கள் தொடர்பான புகார்களை எளிதில் வழங்கக்கூடிய வகையில் ரயில் சுரக்ஷா செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது என்று அருண்குமார் தெரிவித்தார். 6049 நிலையங்கள் மற்றும் அனைத்து பயணிகள் ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்களை நிறுவும் திட்டமும் உள்ளது என ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி கூறினார் .
ALSO READ | மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை முதல் அகவிலைப்படி வழங்கப்படுமா; அரசு கூறுவது என்ன
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR