ஓட்டல் அறையில் ரகசிய கேமரா... அந்தரங்க வீடியோ எடுத்து மிரட்டிய மர்மக்குரல்: சிக்கியது எப்படி?

கேரள மாநிலத்தில் தனியார் விடுதியில் ரகசிய கேமரா வைத்து வாடிக்கையாளர்களை படம் பிடித்து வந்த விடுதி ஊழியர் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட ஊழியரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .  

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 3, 2023, 05:37 PM IST
  • ஹோட்டல் அறையில் ரகசிய கேமரா
  • ஹனிமூன் சென்ற தம்பதிக்கு வந்த போன்
  • பொறியில் சிக்க வைத்து பிடித்த காவல்துறை
ஓட்டல் அறையில் ரகசிய கேமரா... அந்தரங்க வீடியோ எடுத்து மிரட்டிய மர்மக்குரல்: சிக்கியது எப்படி? title=

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் திரூரைச் சேர்ந்த திருமணம் ஆன இளம் தம்பதியினர் தங்கி இருக்கின்றனர். அவர்கள் அங்கிருந்து சென்ற பின்பி சில வாரங்கள் கழித்து அந்த தம்பதியினருக்கு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. எதிர் முனையில் பேசிய அந்த நபர் சொன்ன விஷயங்கள் தம்பதியினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. அந்த அதிர்ச்சிக்கு காரணம் அவர்கள் தங்கியிருந்த விடுதி அறையில் ரகசிய கேமரா வைத்து வீடியோ எடுக்கப்பட்டிருப்பதுதான்.  

மேலும் படிக்க | யூடியூப் பார்த்து கொலை செய்ய கற்றுக்கொண்ட 13 வயது சிறுவன்..!

தொடர்ந்து பேசிய அந்த மர்மக் குரல், உங்களது அந்தரங்க காட்சிகள் என்னிடம் இருக்கிறது. அந்த வீடியோவை இணையத்தில் பகிர இருக்கிறேன். அப்படி செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் தனக்கு பணம் தர வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளது. இதை கேட்டு நிலை குலைந்த தம்பதியினர் தீர யோசித்து ஒரு முடிவுக்கு வந்தனர். தங்களை போல் இனி ஒருவருக்கு இந்த நிலை வரக்கூடாது என தீர்மானித்து திரூர் காவல்துறையினரிடம் புகார் செய்தனர்.

புகாரை பெற்ற காவல்துறையினருக்கும் இந்த சம்பவம் அதிர்ச்சியை கொடுத்தது. துரிதமாக விசாரணையில் இறங்கிய காவல்துறை தம்பதியினருக்கு மீண்டும் தொலைபேசி அழைப்பு வந்தால் பணம் தருவதாக கூறி தாங்கள் சொல்லும் இடத்திற்கு வர சொல்லுமாறு தெரிவித்துள்ளனர். அதேபோல மீண்டும் பணத்திற்காக அழைத்த மர்மக்குரலை குறிப்பிட்ட இடத்திற்கு அந்த தம்பதி வர சொல்லி தகவல் தெரிவித்தனர்.

பணம் கிடைக்கும் ஆவலில் வந்த அந்த மர்மகுரலுக்கு சொந்தமான வாலிபரை காவல்துறையினர் பொறியில் சிக்கிய எலிபோல சுற்றி வளைத்தனர். அதில் அந்த நபர் கோழிக்கோட்டை சேர்ந்த அப்துல் முனீர் என்பது தெரிய வந்தது. சகல மரியாதையுடன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்ததில் அனைத்தையும் சொல்லியிருக்கிறான்.

விசாரணையில், சம்பந்தப்பட்ட தம்பதியினர் தங்கிய விடுதியின் ஊழியர்தான் கைது செய்யப்பட்ட அப்துல் முனீர். தம்பதியினர் தங்கியிருந்த அன்று பணியில் இருந்த அப்துல் முனீர் குறிப்பிட்ட அந்த அறையில் கொசு விரட்டுவதற்காக வைக்கப்படும் கருவியில் ரகசிய கேமராவை பொருத்தி வைத்ததும், அவர்கள் சென்ற பின்பு விடுதி பதிவேட்டில் இருந்து சம்பந்தப்பட்ட வாலிபரின் தொலைபேசி எண்னை எடுத்து  கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தம்பதியினரை மிரட்டியதும் தெரிய வந்தது. 

மேலும் விடுதியின் ஊழியரான அப்துல் முனீர் இதுபோன்று வேறு யாரிடமும் பணம் பறித்துள்ளாரா? அல்லது ரகசிய வீடியோக்களை ஏதும் இணையத்தில் பகிர்ந்துள்ளாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். அவனிடமிருந்து இருந்து ரகசிய கேமரா, லேப்டாப் மற்றும் கைபேசி ஆகியவற்றை போலீசார் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்குபின் குற்றவாளி அப்துல் முனீர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விடுதி அறையில் ரகசிய கேமரா வைத்து  விடுதியில் தங்கியிருந்த அவர்களை ஊழியர் மிரட்டிய சம்பவம்  அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க | ஈரோடு: தனியாக இருந்த இளம்பெண்ணிடம் அத்துமீறிய கிராம நிர்வாக அலுவலர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News