காதலனின் பிறப்புறுப்பை ‘கட்’ செய்த காதலி! காரணம் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..!

Latest News Bihar Girlfriend Chops Off Boyfriend Genitals : பிகாரீல், தனது காதலனின் பிறப்புருப்பை காதலியே வெட்டி எறிந்திருக்கிறார். இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Jul 2, 2024, 05:39 PM IST
  • காதலனின் பிறப்புறுப்பை கட் செய்த பெண்
  • 25 வயது மருத்துவர் அவர்..
  • ஏன் இப்படி செய்தார்?
காதலனின் பிறப்புறுப்பை ‘கட்’ செய்த காதலி! காரணம் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..!  title=

Latest News Bihar Girlfriend Chops Off Boyfriend Genitals : சமீப காலமாக, நம்மை சுற்றி நடக்கும் விஷயங்கள் பல சினிமாவை விட நம்ப முடியாத வகையில் ஆச்சரியம் நிறைந்ததாகவும் கொடுமைகள் நிறைந்ததாகவும் இருக்கின்றன. நாளுக்கு நாள், நாளிதழில் காணப்படும் செய்திகளை பார்க்கையில் “இப்படியும் நடக்குமா?” என்று கூறத்தோன்றுகிறது. அப்படி ஒரு சம்பவம்தான் தற்போது பீகாரில் நடந்தேறியிருக்கிறது. 

காதலனின் பிறப்புறுப்பை வெட்டி எறிந்த காதலி..!

பீகாரை சேர்ந்த ஒரு பெண்தான் தனது காதலனின் பிறப்புறுப்பை அறுக்கும் அந்த கொடூர செயலை செய்திருக்கிறார். மருத்துவரான இவர், பீகாரில் உள்ள பாட்னாவில் வசித்து வருகிறார். இவர், விகாஷ் சிங் என்பவருடன் காதல் உறவில் இருந்திருக்கிறார். பிறப்புறுப்பு வெட்டப்பட்ட இந்த நபர், மதுரா ப்ளாக் வார்ட் நம்பர் 12 எனப்படும் பகுதிக்கு கவுன்சிலராக இருந்து வந்துள்ளார். 

கடந்த ஜூலை 1ஆம் தேதியன்று (ஜூலை) தனது காதலன் விகாஷ் சிங்கின் பிறப்புறுப்பை அறுத்திருக்கிறார், குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் பெண். இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் அவ்விடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், விகாஷை மீட்டு சப்பாரா பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். 

காரணம் என்ன?

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவ காதலியை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், தாங்கள் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் தன்னை திருமணம் செய்து கொள்ள விகாஷ் சிங் மறுத்ததாகவும் அப்பெண் தெரிவித்திருக்கிறார். அவர் மனதை எப்படியோ மாற்றி, இவர் பதிவு திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருக்கிறார். ஆனால், குறிப்பிட்ட திருமண தேதியன்று விகாஷ் சிங் திருமணம் நடைபெறும் இடத்திற்கே வரவில்லையாம். இது, அந்த பெண்ணிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியதோடு, அவருக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் என்று நினைத்த அவர் இப்படியொரு காரியத்தை செய்திருப்பதாக கூறப்படுகிறது. 

குற்றம் புரிந்திருக்கும் பெண், 25 வயதான மருத்துவர் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஹிஜாபூரில் வசித்து வரும் இவர், மார்ஹுவாராவில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த பெண், தற்போது போலீஸாரின் பிடியில் சிக்கி விசாரணைக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார். 

மேலும் படிக்க | பிரேக் அப் செய்ய முயன்ற காதலன்! காதலி செய்த கொடூர செயல்!

இதே போன்ற சம்பவம்..

மேற்கூறிய சம்பவம் போலவே மேலும் வேறு ஒரு சம்பவமும் டெல்லியில் நடந்தது, 

கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி 22 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், ரோட்டில் வியாபாரம் செய்து வரும் 35 வயது நபரின் பிறப்புறுப்பை வெட்டினார். இது குறித்து விசாரணை நடத்தியதில், அப்பெண் பிறப்புறுப்பு வெட்டப்பட்ட நபரின் காதலி என்பதும், திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் அவர் இவ்வாறு செய்ததாகவும் தெரிய வந்தது. ஆனால், குற்றம் செய்த அந்த பெண் அதன் பிறகு தலைமறைவாகிவிட்டார். இந்த சம்பவம், டெல்லியில் உள்ள மங்கோல்புரி எனும் இடத்தில் நடந்தது. 

பிறப்புறுப்பு வெட்டப்பட்ட நபரின் குடும்பத்தினர் இவர்களின் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாததின் விளைவுதான் இவ்வளவு பெறிய குற்றத்திற்கு காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு 11:30 மணியளவில் தனது காதலியின் அண்ணி பாதிக்கப்பட்டவருக்கு போன் செய்திருக்கிறார். அப்போது அவசரமாக ஒரு விஷயம் குறித்து பேச வேண்டும் என்றும், நேரில் வருமாறு அழைத்திருக்கிறார். அப்போதுதான் இந்த சம்பவம் நடந்ததாக போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். 

மேலும் படிக்க | காதலன் வேறு ஒரு பெண்ணுடன் பழகியதால் மனமுடைந்த காதலி விபரீத முடிவு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News