Lok Sabha Elections: 2024 மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை, அதாவது ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கவுள்ளது. நாளை தொடங்கி ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும். ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. நாளை வாக்குப்பதிவு நடக்கும் மாநிலங்களில் நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது.
வாக்காளர் அடையாள அட்டை
வாக்களிபது குடிமக்களாகிய நம் அனைவரின் தலையாய கடமையாக உள்ளது. தேர்தல் செயல்பாட்டில் வாக்காளர் அடையாள அட்டை முக்கிய பங்கு வகிக்கின்றது. இது மட்டுமல்லாமல் இந்த ஆவணம், உங்கள் அடையாளம், வசிக்கும் இடம், பிறந்த தேதி மற்றும் பிற விவரங்களை நிரூபித்து உறுதிப்படுத்தும் முக்கிய அதிகாரப்பூர்வ ஆவணமாகவும் செயல்படுகிறது.
வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்க முடியுமா?
தேர்தல் ஆணையத்தின்படி வாக்குச் சாவடிகளில் வாக்காளர் அடையாளம் அவசியம். வாக்களிக்க, தேர்தல் ஆணையம் அளித்த வாக்காளர் அடையாள அட்டை அல்லது வேறு ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட அடையாளத்தை நீங்கள் வாக்குச்சாவடியில் வழங்க வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India) வழங்கிய அறிவுறுத்தல்களின்படி, வாக்காளர் அடையாள அட்டை இல்லாமலும் தேர்தலில் வாக்களிக்கலாம். அதிகாரப்பூர்வ வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் உங்களால் வாக்களிக்க முடியும்.
வாக்களிக்கும் செயல்பாட்டில் (ECI) பங்கேற்பதற்கு முன், இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை வாக்காளர்கள் சரிபார்க்க வேண்டும். வாக்களிப்பதற்கு முன் இந்தப் பட்டியலைச் சரிபார்ப்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் இதில் ஒருவரது பெயர் இருப்பது வாக்களிப்பதற்கான அவரது தகுதியை உறுதிப்படுத்துகிறது.
வாக்காளர் அடையாள அட்டை இல்லாத பட்சத்தில் என்ன செய்வது? இதற்கான மாற்று ஆவணங்கள் என்ன? தேர்தல் ஆணையம் இதற்காக வகுத்துள்ள விதிகள் என்ன? இதை பற்றி இங்கே காணலாம்.
ஒருவருடைய பெயர் வாக்களர் பட்டியலில் இருந்து, ஆனால், அவரிடம் EPIC அல்லது வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) இல்லை என்றால், அவர் பின்வரும் மாற்று ஆவணங்களை பயன்படுத்தலாம்.
- ஆதார் அட்டை
- MNREGA வேலை அட்டை
- வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பாஸ்புக்குகள்
- தொழிலாளர் அமைச்சகத்தின் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு
- ஓட்டுனர் உரிமம்
- பான் அட்டை
- NPR இன் கீழ் RGI வழங்கிய ஸ்மார்ட் கார்டு
- இந்திய பாஸ்போர்ட்
- புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
- மத்திய/மாநில அரசு/பொதுத்துறை நிறுவனங்கள்/பப்ளிக் லிமிடெட் நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய சேவை (பணி) அடையாள அட்டைகள்
- எம்.பி.க்கள்/எம்எல்ஏக்கள்/எம்எல்சிகளுக்கு வழங்கப்படும் அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகள்
- இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட தனிப்பட்ட ஊனமுற்றோர் அடையாள அட்டை அட்டை (UDID)
உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை எப்படி செக் செய்வது?
வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே நம்மால் வாக்களிக்க முடியும். வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை பின்வரும் வழிகளில் தெரிந்துகொள்ளலாம்.
- https://electoralsearch.eci.gov.in என்ற இணையதளத்தில் லாக் இன் செய்து பார்க்கலாம்.
- வாக்காளர் ஹெல்ப்லைன் 1950 ஐ அழைக்கலாம் (டயல் செய்வதற்கு முன் உங்கள் STD குறியீட்டைச் சேர்க்கவும்)
- 1950 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். உதாரணமாக உங்கள் EPIC 12345678 என்றால், 1950 என்ற எண்ணுக்கு EPIC 12345678 என்று SMS அனுப்பி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
EPIC என்றால் என்ன?
EPIC என்றால் Electors Photo Identity Card, அதாவது வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை என்று பொருள்.
2024 மக்களவைத் தேர்தலில் முதல் கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கவுள்ள மாநிலங்களின் பட்டியல்:
அருணாச்சலப் பிரதேசம் (2 மக்களவைத் தொகுதிகள்)
அசாம் (5)
பீகார் (4)
சத்தீஸ்கர் (1)
மத்திய பிரதேசம் (6)
மகாராஷ்டிரா (5)
மணிப்பூர் (2)
மேகலா (2)
மிசோரம் (1)
நாகாலாந்து (1)
ராஜஸ்தான் (12)
சிக்கிம் (1)
தமிழ்நாடு (39)
திரிபுரா (1)
உத்தரப் பிரதேசம் (8)
உத்தரகாண்ட் (5)
மேற்கு வங்கம் (3)
அந்தமான் நிக்கோபார் தீவுகள் (1)
ஜம்மு மற்றும் காஷ்மீர் (1)
லட்சத்தீவு (1)
புதுச்சேரி (1)
வாக்களிப்பீர்! கடமையை நிறைவேற்றி உங்கள் உரிமையை நிலைநாட்டுவீர்!!
மேலும் படிக்க | உங்களிடம் வோட்டர் ஐடி இல்லையா? அப்போ வாக்களிப்பது எப்படி? உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ