7th Pay Commission: ஆண்டுக்கு இரண்டு முறை அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவை அதிகரிக்கப்படுகின்றன. அந்த வகையில் ஜனவரி 2025 -க்கான அகவிலைப்படி உயர்வு பற்றிய ஒரு அப்டேட் இப்போது வந்துள்ளது.
7th Pay Commission: அந்த வகையில் ஜனவரி 2025 -க்கான அகவிலைப்படி உயர்வு ஜூன் முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். இதுவரை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத பணவீக்க குறியீட்டு வந்துள்ள நிலையில், செப்டம்பர் மாத பணவீக்கக் குறியீடு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த குறியீட்டின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான டிஆர் (DR) அதிகரிக்கலாம். அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு செப்டம்பர் 2024 இல் 0.07 புள்ளிகள் அதிகரித்து 143.3 புள்ளிகளை எட்டியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஜூலை மாதத்தில் பணவீக்கக் குறியீடு 142.7 புள்ளிகளாகவும், ஆகஸ்டில் 142.6 புள்ளிகளாகவும் இருந்தன. இதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ 54% -ஐ எட்டியுள்ளதாக கூறப்படுகின்றது.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவை மீண்டும் அதிகரிக்க உள்ளன. இது சம்பள உயர்வு மறும் ஓய்வூதிய உயர்வு ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.
ஆண்டுக்கு இரண்டு முறை அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவை அதிகரிக்கப்படுகின்றன. அந்த வகையில் ஜனவரி 2025 -க்கான அகவிலைப்படி உயர்வு பற்றிய ஒரு அப்டேட் இப்போது வந்துள்ளது.
தொழிலாளர் அம்மைச்சகம் வழங்கும் அகவிலைப்படி உயர்வு விதிகள் அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில், அதாவது ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ (DA) தீர்மானிக்கப்படுகின்றது. முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜனவரி மாத அகவிலைப்படியும், ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜூலை மாத ஏஐசிபிஐ குறியீட்டு எண்களும் தீர்மானிக்கப்படுகின்றன.
அந்த வகையில் ஜனவரி 2025 -க்கான அகவிலைப்படி உயர்வு ஜூன் முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். இதுவரை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத பணவீக்க குறியீட்டு வந்துள்ள நிலையில், செப்டம்பர் மாத பணவீக்கக் குறியீடு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த குறியீட்டின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான டிஆர் (DR) அதிகரிக்கலாம்.
அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு செப்டம்பர் 2024 இல் 0.07 புள்ளிகள் அதிகரித்து 143.3 புள்ளிகளை எட்டியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஜூலை மாதத்தில் பணவீக்கக் குறியீடு 142.7 புள்ளிகளாகவும், ஆகஸ்டில் 142.6 புள்ளிகளாகவும் இருந்தன. இதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ 54% -ஐ எட்டியுள்ளதாக கூறப்படுகின்றது.
அக்டோபர் மாதத்தில் ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி அதிகரிப்பு அறிவிக்கப்பட்டது. அப்போது டிஏ 3% அதிகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் (Pensioners) அகவிலை நிவாரணம் ஆகியவை 53% ஆக உயர்ந்துள்ளன.
இதற்கிடையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு விரைவில் 8வது ஊதியக்குழுவுக்கான அறிவிப்பு எப்போது வேண்டுமானால் வரலாம் என கூறப்படுகின்றது. இதற்காக ஊழியர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக எதையும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், இந்த மாதம் விவாதங்கள் தொடங்கலாம் என கூறப்படுகின்றது.
பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக்கூழுக்கள் அமைக்கப்படுகின்றன. 7வது ஊதியக்குழு 2016 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு 8வது ஊதியக்குழு அமைக்கப்படும் என்றும், அதற்கான அறிவிப்பு 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் செய்யப்படும் என்றும் நம்பப்படுகின்றது.
கூட்டு ஆலோசனைக் குழுவின் கூட்டம் இந்த மாதம் நடக்கவுள்ளது. இந்த குழுவில் மத்திய ஊழியர்கள் மற்றும் அரசின் பிரதிநிதிகள் உள்ளனர். இதில் 8வது ஊதியக்குழு குறித்த உடன்பாடு ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊதிய உயர்வு: 8வது ஊதியக் குழு அமலுக்குப் பிறகு, அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச சம்பளத்தில் பெரிய உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அடிப்படை ஊதியம் (Basic Salary) ரூ.18,000 -இலிருந்து ரூ.34,560 ஆக உயரக்கூடும். இது சுமார் 52% அதிகரிக்கும். உயர் பதவிகளில் பணிபுரியும் ஊழியர்களின் அதிகபட்ச சம்பளம் மாதத்திற்கு ரூ.4,80,000 ஆக அதிகரிக்கலாம. இது தற்போதைய ரூ.2.5 லட்சத்தை விட 92% அதிகமாகும்.
8வது ஊதியக்குழு அமலாக்கத்தால் ஓய்வூதியதாரர்களும் பயன்பெற வாய்ப்புள்ளது. தற்போது குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 ஆக உள்ளது. 8வது ஊதியக்குழு அமலுக்கு பிறகு இது ரூ.17,280 ஆக அதிகரிக்கலாம். அதேபோல், அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.1,25,000 -இலிருந்து ரூ.2,40,000 ஆக அதிகரிக்கலாம். இது ஓய்வூதியதாரர்களின் நிதி நிலைமையை மேம்படுத்தும்.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.