மும்பை: மகாராஷ்டிராவில் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், முதல்வர் உத்தவ் தாக்கரேவுடன் தான் இருப்பதாக சிவசேனா எம்எல்ஏ நிதின் தேஷ்முக் தெரிவித்துள்ளார். எம்எல்ஏ நிதின் தேஷ்முக், தான் கடத்தப்பட்டு குஜராத்தில் உள்ள சூரத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறியுள்ளார். மேலும் அங்கிருந்து தப்பி ஓடி வந்து விட்டதாகவும் கூறியது, மகாராஷ்டிராவில் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. முன்னதாக எம்எல்ஏ நிதின் தேஷ்முக் சிவசேனாவுக்கு எதிராக செயல்படும் தலைவர்களில் ஒருவர் என்று நம்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், முதல்வர் உத்தவ் தாக்கரேவுடன் தான் இருப்பதாக நிதின் தேஷ்முக் தற்போது தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.
நிதின் தேஷ்முக் கூறுகையில், "நான் இரவு 12 மணியளவில் எங்களை தங்க வைக்கப்பட்ட ஹோட்டலில் இருந்து தப்பித்து வெளியேறி, அதிகாலை 3 மணியளவில் சாலையில் நின்று கொண்டிருந்தேன். அங்க வந்த வாகனங்களிடம் லிப்ட் கேட்க முயன்றேன். என் பின்னால் 100-200 போலீசார் இருந்தனர். அவர்கள் வந்து என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, எனக்கு "அட்டாக்" (மாரடைப்பு) வந்திருப்பதாகக் கூறி ஒரு நாடகத்தை உருவாக்கினர். மேலும் எனக்கு சில பரிசோதனைகள் செய்ய முற்பட்டனர். ஆனால் எனக்கு எந்தவொரு நோய்யும் இல்லை எனக்கு மாரடைப்பு வரவில்லை" என்றார்.
#WATCH | Shiv Sena MLA Nitin Deshmukh - who returned to Nagpur from Surat - says, "...100-150 Policemen took me to a hospital & pretended as I've suffered an attack. They wanted to operate on me, harm me under that pretext. By God's grace, I'm alright. I am with Uddhav Thackeray" pic.twitter.com/r1uSOMK0IS
— ANI (@ANI) June 22, 2022
சிவசேனா எம்எல்ஏ நிதின் தேஷ்முக்கின் மனைவி நேற்று உள்ளூர் காவல்நிலையத்தில் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவர் காணவில்லை என்று புகார் அளித்துள்ளார்.
மேலும் படிக்க: சிக்கலில் மகாராஷ்டிர அரசு: சிவசேனா எம்.எல்.ஏக்கள் குஜராத்தில் முகாம்
மகாராஷ்டிராவில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், மாலை 5 மணிக்கு உத்தவ் தாக்கரேவின் இல்லத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுடன் தொலைபேசியில் பேசியதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னால் முதலைமைச்சர் கமல்நாத் தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். போனவர்கள் திரும்பி வருவார்கள். தற்போது சட்டசபை கலைப்பு என்று எதுவும் இல்லை. உத்தவ் தாக்கரேவை சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால் அவருக்கு கோவிட் பாசிட்டிவ் என்பதால், அவரை சந்திக்க முடியவில்லை எனவும் கமல்நாத் கூறினார்.
மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடிக்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படும் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சிறப்பு விமானம் மூலம் புதன்கிழமை காலை 6.20 மணிக்கு சூரத்தில் இருந்து கவுகாத்தி சென்றடைந்தார். இருப்பினும், சிவசேனாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள ஏக்நாத் ஷிண்டே, தனக்கு 6 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 46 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகக் கூறினார். ஆனால் அதற்கு முன் சூரத் ஹோட்டலில் வந்த குரூப் படத்தில் மொத்தம் 35 எம்.எல்.ஏ.க்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும் படிக்க: Draupadi Murmu: யார் இந்த திரெளபதி முர்மு: பாஜக ஜனாதிபதி வேட்பாளரின் பின்னணி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR