ஹாவேரி: கடனுதவி நிராகரிக்கப்பட்டதால் மனமுடைந்த ஒருவர், கர்நாடகா மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் உள்ள பியாடகி தாலுகா அருகே ஹெடிகொண்டா கிராமத்தில் சனிக்கிழமை இரவு வங்கிக்குள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். வங்கிக்கு தீ வைத்தது தொடர்பாக ரட்டிஹள்ளியைச் சேர்ந்த வாசிம் அக்ரம் முல்லா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வங்கியில் தீ வைத்துவிட்டு தப்பியோடியபோது கிராம மக்களால் பிடிக்கப்பட்டார்.
இருப்பினும், வங்கியை எரித்ததில் வங்கியில் பணியாற்றும் நபர்களின் பங்கு இருப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியதால் இந்த சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இது ஆவணங்களை அழிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட செயல் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடன் மறுக்கப்பட்டதால் வங்கிக்கு தீ வைத்ததாக வாசிம் போலீசாரிடம் கூறியதாக கூறப்படுகிறது, ஆனால் கிராம மக்கள் வங்கியில் உள்ளவர்களுக்கும் பங்குன் இருப்பதாக சந்தேகிக்கின்றனர்.
ALSO READ | குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் - டிஜிபி உத்தரவு!
இந்த சம்பவத்தில் வங்கியில் இருந்த கணினிகள், சிசிடிவி கேமராக்கள், ஆவணங்கள், தளபாடங்கள் ஆகியவை சாம்பலாயின. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து, மேலும் பரவாமல் தடுத்தனர்.
Karnataka: Upset over rejection of his loan application, a man allegedly set the bank on fire in Haveri district on Sunday
"The accused has been arrested and a case has been registered at Kaginelli police station under Sections 436, 477, 435 of IPC," say police pic.twitter.com/jrlHOYhegS
— ANI (@ANI) January 10, 2022
பைக்கில் வந்த மர்ம நபர்கள், வங்கியின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். வங்கியில் இருந்து புகை வெளியேறியதை கண்ட கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வாசிம் ஓடி வருவதை பார்த்து, அவரை தடுக்க முயன்ற போது, கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. எப்படியோ அவரை கிராம மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். காகினேல் போலீசார் கிராம மக்களிடம் வாக்குமூலம் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ALSO READ | கொரோனா அச்சம் காரணமாக குடும்பத்துடன் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி; இருவர் பலி!
ALSO READ | கூலிப்படை வைத்து கணவனை கொலை செய்த மனைவி..! பின்னணி என்ன?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR