பாஸ்போர்ட்டில் தாமரை சின்னம்! மத்திய அரசு விளக்கம்!

புதிய பாஸ்போர்ட்டுகளில் தாமரை சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதை குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

Last Updated : Dec 13, 2019, 09:53 AM IST
பாஸ்போர்ட்டில் தாமரை சின்னம்! மத்திய அரசு விளக்கம்! title=

புதிய பாஸ்போர்ட்டுகளில் தாமரை சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதை குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் புதிதாக கொண்டுவரப்பட்ட புதிய பாஸ்போர்ட்டுகளில் தாமரை பொறிக்கப்பட்டு இருப்பதாக மக்களவையில் நேற்று முன்தினம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.கே.ராகவன் தெரிவித்தார். 

இந்நிலையில் தற்போது இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார். அதில், 

போலி பாஸ்போர்ட்டுகளை அடையாளம் காண்பதற்கான பாதுகாப்பு அம்சங்களின் ஒரு பகுதியாக தாமரை சின்னம் பொறிக்கப்பட்டது. மேலும் தாமரை நமது தேசிய மலராகும், விரைவில் ஒவ்வொரு தேசிய சின்னமும் சுழற்சி முறையில் பாஸ்போர்ட்டில் இடம்பெறும்.

Trending News