Home Remedies To Remove Dark Circles: இன்றைய காலகட்டத்தில் ஒருவருக்கு சுற்றுச்சூழல் மாசுபாடு, பணிச்சார்ந்த அழுத்தம், அதிக நேர பயணம் ஆகியவை காரணமாக உடல்நலனும், மனநலனும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. மேற்சொன்ன அனைத்தும் இரவில் ஒருவரின் தூக்கத்தை கடுமையாக பாதிக்கும், அதன்மூலம் ஒட்டுமொத்த உடல்நலத்தை பலவீனமாக்கும். இவை அனைத்தும் வெளியில் தெரியாது என்றாலும், வெளியில் தெரியும் அறிகுறி என்றால் அது கண்ணுக்கு கீழ் தெரியும் கருவளையம் எனலாம்.
இந்த கருவளையங்கள் உங்களை சோர்வாக, மிகவும் பொழிவு இழந்து, நம்பிக்கையற்ற தோற்றத்தை உருவாக்கக் கூடியதாகும். இருப்பினும் இதனை சில வீட்டு வைத்தியங்கள் மூலமாகவே சரிசெய்யலாம். கருவளையங்கள் உங்களுக்கு மிகவும் கவலையை அளிக்கிறது என்றால் இதனை தொடர்ச்சியாக செய்து உடனடி தீர்வை பெறுங்கள்.
இந்த வீட்டு வைத்தியங்கள் உங்கள் பட்ஜெட்டிலேயே இருக்கும், பெரியளவில் செலவும் வைக்காது. இதனை சருமத்தில் மிருதுவாக தடவிக்கொண்டு உங்களின் அன்றாட வேலைகளையும் செய்துகொள்ளலாம். தொடர்ந்து இந்த வழிமுறையை செய்து வந்தால் ஆரோக்கியமாகவும், இயற்கையாகவும் சருமம் பொழிவாகும், கருவளையங்கள் பிறர் கண்ணுக்கு தெரியாமல் மறைந்தும் போகும்.
கற்றாழை பசை
இது நீண்ட காலமாக சரும பிரச்னைக்கு தீர்வளிக்கக் கூடிய ஒன்றாக உள்ளது. மேலும் இதில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. நீங்கள் கற்றாழையில் இருந்து பசையை எடுத்து அப்படியே கண்களுக்கு கீழே கருவளையம் இருக்கும் இடங்களில் தேய்த்துக்கொள்ளுங்கள். சில நிமிடங்களுக்கு அப்படியே மசாஜ் செய்துக்கொள்ளுங்கள். ஒருநாளுக்கு இரண்டு முறை இதை செய்தால் நீங்கள் எதிர்பார்க்கும் ரிசல்ட் கிடைக்கும்.
ரோஸ் வாட்டர்
இதுவும் கருவளையங்களையும், கண்களுக்கு கீழ் வீக்கத்தையும் குறைத்து சருமத்தை பொழிவாக்க உதவும். பஞ்சை உருண்டையாக உருட்டி அதனை ரோஸ் வாட்டரில் நனைத்துக்கொள்ளுங்கள். கண்களுக்கு கீழே ஒருநாளுக்கு 3-4 முறை இந்த ரோஸ் வாட்டர் பஞ்சை வைத்து துடைத்துக்கொள்ளுங்கள். இதையும் ஒருநாளுக்கு இரண்டு முறை செய்யுங்கள், நல்ல பலன் கிடைக்கும்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய்யை உள்ளங்கையில் கொஞ்சமாக எடுத்துக்கொல்ளுங்கள். அதை கண்களுக்கு கீழ் 4-5 நிமிடங்கள் தேய்த்துக்கொண்டு சருமத்தில் ஊறவையுங்கள். இதனை தினமும் செய்தால் கைமேல் பலன் கிடைக்கும்.
பாதாம் எண்ணெய்
கையில் 2 துளி பாதாம் எண்ணெய்யை எடுத்துக்கொள்ளுங்கள். இதனை 5 நிமிடங்களுக்கு கண்களுக்கு கீழ் தடவிக்கொள்ளுங்கள். தினமும் இரண்டு முறை தேய்த்துக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
எலுமிச்சை ஜூஸ் மற்றும் தக்காளி ஜூஸ்
எலுமிச்சை ஜூஸ் மற்றும் தக்காளி ஜூஸ் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொள்ளுங்கள். அதனை நன்றாக கலக்கிவிட்டு, பஞ்சை வைத்து அதனை கண்ணுக்கு கீழ் தடவிக்கொள்ளுங்கள். 10 நிமிடங்களுக்கு பிறகு அதனை தண்ணீர் வைத்து கழுவிவிடவும். இதனை தினமும் செய்தால் பலன் கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் வீட்டு வைத்தியங்கள் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை பின்பற்றும் முன் முறையான மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | சுகர் நோயாளிகளுக்கு வரமாய் அமையும் பாகற்காய் ஜூஸ்: தினமும் இப்படி குடிச்சி பாருங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ