ஜனவரி 29 ஆம் தேதி டெல்லி மெட்ரோ ரயிலின் மஞ்சள் லைன் சேவைகள் குறைக்கப்படும் என்று டி.எம்.ஆர்.சி தெரிவித்துள்ளது.
மஞ்சள் லைனில் விழும் உத்யோக் பவன் மற்றும் மத்திய செயலகம் மெட்ரோ ரயில் சேவை ஜனவரி 29 ஆம் தேதி சில மணி நேரம் குறைக்கப்படயுள்ளது.
இது தொடர்பாக டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் கூறியதாவது, உத்யோக் பவன் மற்றும் மத்திய செயலகம் மெட்ரோ ரயில் சேவை மதியம் 2 மணி முதல் மாலை 6.30 மணி வரை நிறுத்தப்படும். உத்யோக் பவன் நிலையத்தில், மாலை 2-6.30 மணி முதல் சேவைகள் கிடைக்காது, மேலும் மத்திய செயலகத்தில் மாலை 4-6.30 மணி வரை சேவைகள் கிடைக்காது. மேலும், மாலை 2-4 மணி வரையில் மத்திய செயலக நிலையத்தில் நுழைவு மற்றும் வெளியேறுதல் கேட் எண் 1 இலிருந்து அனுமதிக்கப்படும். அதே சமயம் மீதமுள்ள வாயில்கள் மூடப்பட்டிருக்கும் "என்று டி.எம்.ஆர்.சி தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த காலகட்டத்தில் மத்திய செயலக நிலையத்தில் மஞ்சள் லைன் டூ வயலட் லைன் (காஷ்மீர் கேட் முதல் ராஜா நஹர் சிங்) வரை பரிமாற்ற வசதி அனுமதிக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 29 ஆம் தேதி அன்று குடியரசு தின கொண்டாட்டங்களை முடிக்கும் வகையில் beating retreat விழா அரங்கேறும். இந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.
அத்துடன் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள ரைசினா ஹில் பகுதியில் இருந்து, விஜய் சவுக், இந்தியா கேட் வழியாக தியான்சந்த் தேசிய விளையாட்டு அரங்கம் வரை அமைந்துள்ள ராஜபாதையும் மறுவடிவமைப்பு செய்யப்படும்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.