மும்பை: மற்றுமொரு துயரமான சம்பவத்தினில் மும்பை மாலத் பகுதியைச் சேர்ந்த புதுமண தம்பதியர் நேற்று (வெள்ளி) மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
வேலையின்மை காரனமாக கனவன் மனைவி இருவரும் தங்களது வாழ்க்கியினை முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளன். மாலை 8.30 மணியளவில் இவர்கள் தங்களது வீட்டின் உத்திரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டனர்.
காவல்துறை அறிக்கையின்படி இரந்தவர்கள் தன்ராஜ் (24), காஜல் (19) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பின்னர் சடலங்கள் பிரேத பரிசேதனைக்காக மும்பை மருத்துவமணைக்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னரே இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணத்திற்குப் பின்னர், தன்ராஜ் தனது வேலையை இழக்க மன அழுத்தத்திற்கு ஆளாகாயுள்ளார்.