தேக்கடி ஆனைவாசல் பகுதியில் உள்ள முல்லைப் பெரியாறு அணை அருகில் வாகன நிறுத்தம் அமைக்கும் பணியில் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது. அனால், அந்த இடம் தமிழக அரசுக்கு சொந்தமானது என, சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதிகள் தமிழகத்திற்கு சுமார் 999 ஆண்டுகளுக்கு முன் குத்தகைக்கு விடப்பட்டிருப்பதால், அதில் கட்டுமானப் பணிகள் நடைபெற அனுமதி இல்லை என்று தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கிற்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் சமீபத்தில் தமிழகத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கியது.
‘கேரளா அரசு வாகன நிறுத்தம் அமைக்க, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அனுமதி வழங்கியது. எனவே, கேரளா அரசு வாகன நிறுத்தம் அமைக்க தடையில்லை’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டது.
Parking project near Mullaperiyar dam case: SC will hear on November 27, a plea filed by Tamil Nadu Govt challenging NGT order which allowed a car parking project in Kumili, located near the dam in Kerala.
— ANI (@ANI) November 23, 2017
இதனை ஏற்ற உச்ச நீதிமன்றம், இவ்வழக்கை அவசர வழக்காக 27-ம் தேதி விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளது.