இன்று செவ்வாய்க்கிழமை, டெல்லி தலைமை செயலகத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய் தூள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு பெரும் சேதம் எதுவும் ஏற்ப்படவில்லை.
இன்று மதியம் உணவு அருந்திவிட்டு டெல்லி தலைமை செயலகத்திற்கு வந்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம், நடுத்தர வயதான ஒருவர் அவருக்கு வணக்கம் கூறியபடி, தனது புகார்கள் அடங்கிய கவரை அவரிடம் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்டு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது அறைக்கு செல்ல முற்ப்பட்ட போது, திடிரெனே முதலமைச்சரின் கால்களை பிடிக்க சென்றார்(காலை பிடிக்க சென்றாரா? இல்லை காலில் விழா சென்றாரா? என்பது தெரியவில்லை). பின்னர் அந்த நபர் தன் கையில் வைத்திருந்த மிளகாய் தூளை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முகத்தில் பூசினார். அப்பொழுது முதல்வரின் பாதுகாவலர்கள், அந்த நபரை தடுத்து நிறுத்தினர்.
#WATCH: CCTV from Delhi Secretariat. Delhi Police say 'Anil Kumar came to meet Delhi CM to share his grievances. He handed him a note & touched his feet, & chilli powder fell from his hand. Probe underway whether it was an attack or powder fell unintentionally' pic.twitter.com/UYMhCAb3Hm
— ANI (@ANI) November 20, 2018
தற்போது அந்த நபரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு, அவரிடம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். டெல்லி தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.