பாராளுமன்ற மைய மண்டபத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயி அவர்களின் முழு உருவப்படத்தை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்!
புதுடெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18-ஆம் நாளை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பாரத ரத்னா விருது பெற்ற முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயி அவர்களின் உருவப்படத்தை திறக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
Watch LIVE as President Kovind unveils the portrait of late PM Shri Atal Bihari Vajpayee in Parliament https://t.co/qy3ybWZ6rO
— President of India (@rashtrapatibhvn) February 12, 2019
அதன்படி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மைய மண்டபத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயி உருவப்படம் வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. மேலும் பிப்ரவரி 12-ஆம் தேதி(இன்று) படம் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக, பாராளுமன்ற மைய மண்டபத்தில் வாஜ்பாயின் முழு உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வின் போது துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு மத்திய அமைச்சர்கள் தலைவர்கள் பங்கேற்றனர்.
நாட்டின் பிரதமராக மூன்று முறை பதவி வகித்த வாஜ்பாயி, 1996-ஆம்13 நாட்களும், 1998 முதல் 1999 வரையிலான காலகட்டத்தில் 13 மாதங்களும், 1999 முதல் 2004-ஆம் ஆண்டு வரை என மூன்று முறை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தார். இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்றுள்ளார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 16-ஆம் நாள் உடல்நலக்குறைவால் காலமானது குறிப்பிடத்தக்கது.