ஆயுள் சான்றிதழ் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்வது? ஓய்வூதியம் நிறுத்தப்படுவதை தவிர்க்க வழி என்ன?

Digital Life Certificate: ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்கின்றனர். ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்க அரசாங்கம் பல வழிகளை வழங்கியுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 15, 2024, 03:58 PM IST
  • ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க எளிதான வழி என்ன?
  • இதற்கான விதி என்ன?
  • ஆயுள் சான்றிதழ் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்வது?
ஆயுள் சான்றிதழ் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்வது? ஓய்வூதியம் நிறுத்தப்படுவதை தவிர்க்க வழி என்ன? title=

Digital Life Certificate: ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரரா நீங்கள்? உங்கள் வீட்டில் ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்கள் இருக்கிறார்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்கின்றனர். ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்க அரசாங்கம் பல வழிகளை வழங்கியுள்ளது.

Digital Life Certificate

இந்த வழிகளின் மூலம் ஓய்வூதியம் பெறுவோர் இப்போது எந்த சிரமமும் இல்லாமல் வீட்டிலிருந்தபடியே வாழ்க்கைச் சான்றிதழ்களை சமர்ப்பிக்கலாம். DLC எனப்படும் டிஜிட்டல் முறையில் இதை செய்ய முடியும். டிஜிட்டல் லைஃப் சர்டிஃபிகேட் என்பது ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான பயோமெட்ரிக் இயக்கப்பட்ட ஆதார் அடிப்படையிலான டிஜிட்டல் லைஃப் சான்றிதழாகும். ஜீவன் பிரமான் என்றும் அழைக்கப்படும் DLC ஓய்வூதியதாரருக்கு அவர்களின் ஆதார் எண் மற்றும் பயோமெட்ரிக்ஸைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது.

ஆயுள் சான்றிதழ் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்வது?

சில சந்தர்ப்பங்களில், ஓய்வூதியதாரர்கள் சமர்ப்பிக்கும் ஆயுள் சான்றிதழ் நிராகரிக்கப்படுவதுண்டு. 
- வாழ்க்கைச் சான்றிதழ் நிராகரிக்கப்பட்டால், அதை சரி செய்ய, உங்கள் ஓய்வூதியம் வழங்கும் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும். 
- DLC ஐ உருவாக்கும் போது ஓய்வூதியதாரர் தவறான விவரங்களை வழங்கி இருந்தால், ஆயுள் சான்றிதழ் நிராகரிக்கப்படலாம். 
- அப்படி இருந்தால், அனைத்து தகவல்களையும் பயோமெட்ரிக்களையும் சரியான வழியில் அளித்து, புதிய ஆயுள் சான்றிதழ் அதாவது பிரமான்-ஐடியை உருவாக்கலாம்.

மேலும் படிக்க |  SIP Investment: டீ காசை மிச்சம் பிடித்தாலே போதும்... ஓய்வு பெறும் போது ரூ.10 கோடி கையில் இருக்கும்

ஜீவன் பிரமான் வங்கி, தபால் அலுவலகம், ஓய்வூதியம் வழங்கும் ஏஜென்சி ஆகியவற்றில் ஓய்வூதியதாரர் DLC ஐ சமர்ப்பிக்க வேண்டியதில்லை. DLC அவர்களுக்கு தானாகவே மின்னணு முறையில் கிடைக்கும். டிஜிட்டல் லைஃப் சான்றிதழ் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும். ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் இதை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க எளிதான வழி

- ஓய்வூதியம் பெறுவோர் ஜீவன் பிரமான் போர்டல் மூலம் தங்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். 

- எளிய வழியில் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க இதற்கு ஓய்வூதியம் பெறுவோர் ஜீவன் பிரமான் செயலியை போர்ட்டலில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். 

- இது தவிர, UIDAI க்கு தேவையான கருவியைப் பயன்படுத்தி ஓய்வூதியம் பெறுபவர் தனது கைரேகையை சமர்ப்பிக்க வேண்டும்.

- கைரேகை ரீடரை ஸ்மார்ட்போனுடன் இணைக்க OTG கேபிளைப் பயன்படுத்தலாம். 

- ஜீவன் பிரமான் இணையதளத்தில் UIDAI-ஆணையிடப்பட்ட சாதனங்களின் பட்டியல் உள்ளது. 

- உங்களைப் பதிவு செய்துகொள்ள பிசி/மொபைல் செயலியைப் பதிவிறக்கவும்.

- அல்லது அருகிலுள்ள ஜீவன் பிரமான் மையத்திற்கு சென்று விவரங்களை அறியலாம்.

- ஆண்ட்ராய்டு பயனர்கள் ப்ளே ஸ்டோரில் இருந்து ஜீவன் பிரமான் செயலியை பதிவிறக்கம் செய்யலாம்.

Life Certificate: இதற்கான விதி என்ன?

- வாழ்க்கை சான்றிதழுக்கான விதியின் கீழ், 60 முதல் 80 வயது வரை உள்ள அனைத்து ஓய்வூதியதாரர்களும் தங்கள் வாழ்க்கை சான்றிதழை (ஜீவன் பிரமான் பத்ரா) அதாவது லைஃப் சர்ட்ஃபிகேட்டை நவம்பர் 1 முதல் நவம்பர் 30 -க்குள் சமர்ப்பிக்க வேண்டும். 
- 80 வயதான சூப்பர் சீனியர் ஓய்வூதியதாரர்கள் இந்த சான்றிதழை அக்டோபர் 1 முதல் நவம்பர் 30 -க்குள் சமர்ப்பிக்கலாம்.
- விதியின் கீழ், வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 30 ஆகும். 
- இந்த தேதிக்குள் இந்த சான்றிதழை சமர்ப்பிக்காத ஓய்வூதியதாரர்களுக்கு டிசம்பர் முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும்.

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: எக்கச்சக்கமாக உயரப்போகும் ஊதியம், ஓய்வூதியம்.... மத்திய அரசு ஊழியர்களுக்கான கணக்கீடு இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News