புதுடெல்லி: 'மோடி குடும்பப்பெயர்' குறித்த கிரிமினல் அவதூறு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிபோனது. மார்ச் 23 முதல் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார் ராகுல் காந்தி. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் வரவிருக்கும் நிலையில், இந்த விஷயம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Congress party's Rahul Gandhi disqualified as a Member of Lok Sabha from the date of his conviction in the criminal defamation case over his 'Modi surname' remark, March 23. pic.twitter.com/qmr9pRTtTh
— ANI (@ANI) March 24, 2023
இதற்கிடையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக தெருவில் இறங்கி போராடப் போவதாக காங்கிரஸ் முடிவு செய்துவிட்டது.
ராகுல் காந்தி பதவி நீக்க பின்னணி
2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது, ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக அவர் மீது சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில்
இந்த வழக்கில் நேற்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், ராகுல் காந்தி குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், உடனடியாக கைது செய்யப்படுவதைத் தவிர்க்கும் வகையில் அவருக்கு சூரத் நீதிமன்றம் ஜாமீனும் வழங்கியது.
மேலும் படிக்க: ராகுல் காந்தி "தற்கால இந்திய அரசியலின் மிர் ஜாஃப்ர்" பாஜக புதிய சர்ச்சை
பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த ராகுல் காந்தி, தவறான சொற்களை பயன்படுத்தியதால், இந்த முடிவு ஏற்பட்டதாக பரவலாக பேசப்பட்டாலும், தேர்தல் பிரச்சாரங்களில் இதைவிட மிகவும் மோசமாக பேசியது இல்லையா என்றும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
தற்போது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 (Representation of the People Act) என்ன சொல்கிறது?
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 8-இன் கீழ், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருக்கும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர், சட்டமேலவை உறுப்பினர் ஆகியோர் மீதான கிரிமினல் வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து, இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்துக்கு தண்டிக்கப்பட்டால் அவர்களின் பதவி தகுதிநீக்கம் செய்யப்படும்.
அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டதை அடுத்து, இந்திய அரசியல் களம் சூடுபிடித்துவிட்டது. இந்த வழக்கை சட்டரீதியாக மட்டுமின்றி, அரசியல் ரீதியாகவும் போராடப் போவதாக அறிவித்துள்ள பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், வெகுஜனப் போராட்டத்தை அறிவித்துள்ளது.
மேலும் படிக்க: ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை! குஜராத் சூரத் நீதிமன்றம் தீர்ப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ