காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி இன்று பொறுப்பேற்பு!!

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி இன்று பொறுப்பு ஏற்கிறார். காங்கிரஸ் தலைமையகத்தில் தொண்டர்கள் குவிந்தனர்.  

Last Updated : Dec 16, 2017, 10:37 AM IST
காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி இன்று பொறுப்பேற்பு!! title=

சோனியா காந்தி சமீபகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். மூத்த நிர்வாகிகளை வீட்டுக்கு அழைத்து கட்சி தொடர்பாக ஆலோசனை வழங்கி வந்தார். 

இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக 11–ந் தேதி ராகுல் காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவர் இன்று (சனிக்கிழமை) முறைப்படி கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்கிறார்.

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க உள்ளதையொட்டி டெல்லியில், உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இனிப்புகளுடன் தொண்டர்கள் வருகை வந்துள்ளனர்.  

 

Trending News