காங்கிரஸ் கட்சி லோக்சபா தேர்தல் 2024ல் ராஜஸ்தான், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அதிக தொகுதிகளை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது வரை வெளியான முடிவுகளில் இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்தளவுக்கான வெற்றியை பெறவில்லை. இத்தனைக்கும் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருப்பதால் குறைந்தபட்சம் 20 தொகுதிகளை வெல்லும் என்று சொல்லப்பட்டது. அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார், லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் 20 தொகுதிகளுக்கும் மேல் வெல்லும் என உறுதியாக கூறி வந்தார். ஆனால், அவருக்கே இந்த தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
பாரதிய ஜனதா கட்சி 16 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் இரண்டு தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இது ஆளும் கட்சியான காங்கிரஸூக்கு ஷாக்காக அமைந்துள்ளது. இதேபோல், ராஜஸ்தான் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியால் எதிர்பார்த்த தொகுதிகளை கைப்பற்ற முடியாத சூழலே இருக்கிறது. மொத்தம் 25 லோக்சபா இருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக ஒரு தொகுதியில் வெற்றியை உறுதி செய்துவிட்டது. 13 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. குறைந்தபட்சம் 15 தொகுதிகளிலாவது காங்கிரஸ் பெறும் என்ற நம்பிக்கையில் இருந்தனர் சச்சின் பைலட் மற்றும் அசோக் கெலாட். ஆனால் அவர்களின் பிரச்சாரம் மற்றும் உழைப்பு வாக்குகளாக மாறவில்லை.
ராகுல்காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கிய சபாநாயகர் ஓம் பிர்லா ராஜஸ்தான் மாநிலம் கோட்டா தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் அவரை தோற்கடிக்க காங்கிரஸ் தீவிரமாக வேலை செய்து. இருப்பினும் அவர் முன்னிலையில் இருக்கிறார். இதேபோல் ஜாலாவர் பாரன், பிகானர்(SC), ஜுன்ஜுனு, ஜெய்ப்பூர், ஆழ்வார், அஜ்மீர், பாலி, ஜோத்பூர், ஜலோர், உதய்பூர்(ST), சித்தூர்கர், பில்வாரா, ராஜ்சமந்த் ஆகிய தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. கங்காநகர் (SC), சுரு, ஜெய்ப்பூர் ரூரல், பரத்பூர் (SC)கரௌலி-தோல்பூர் (SC), தௌசா(ST), டோங்க் - சவாய் மாதோபூர், பார்மர், நாகௌர் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ