வயல்வெளியில் பற்றிய தீயை அணைக்க கைப்பம்பில் தண்ணீர் அடித்துக் கொடுத்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி!!
அமேதி மக்களவை தொகுதியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து, இரண்டாவது முறையாக, ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார். இந்நிலையில், கிராமங்கள் தோறும் சென்று பொதுமக்களை சந்தித்து, அவர்களோடு அளவளாவி, தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த வகையில், புராப் துவாரா (Purab Dwara) கிராமத்திற்கு வாக்குசேகரிப்பதற்காக சென்றபோது, அங்கு வயல்வெளியில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அங்கிருந்த இளைஞர்களை திரட்டி, தீயை அணைக்க நடவடிக்கை மேற்கொண்ட ஸ்மிருதி இரானி, கைபம்பில் தானே தண்ணீர் அடித்து கொடுத்து உதவினார்.
தீயணைப்புத்துறையினரிடமும், தீயை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். தீயால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து, ஸ்மிருதி இரானி ஆறுதல் கூறினார். இந்த வீடியோவை, ANI செய்திநிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுள்ளது. அந்த வீடியோ இணையத்தில் விரலாக பீவி வருகிறது. அந்த வீடியோ பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
#WATCH Amethi: Union Minister and BJP Lok Sabha MP candidate from Amethi, visits the fire-affected fields in Purab Dwara village; meets the locals affected. Fire-fighting operations are still underway pic.twitter.com/JARKp5k2mh
— ANI UP (@ANINewsUP) April 28, 2019