தங்கத்தை முதலீட்டு நோக்கில் மட்டும் வாங்க மட்டுமே விரும்புபவர்களை இலக்காக வைத்து 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது தான் தங்கப் பத்திரத் திட்டம். இத்திட்டத்தில் தங்கத்தை பொருள் வடிவில், அதாவது நகையாகவே, நாணயமாகவோ வாங்காமல் பத்திர வடிவில் வாங்கி முதலீட்டிற்கான பலனை பெற முடியும். இதில் உள்ள மற்றொரு முக்கிய சிறப்பு அமசம். தங்கத்தை பொருள் வடிவில் வைத்திருந்தால், அதனை திருடு போகாமல் பாதுக்காக்க வேண்டிய பொறுப்பும் ஏற்படுகிறது. அப்படி அல்லாமல், தங்கத்தை ஆவண வடிவில் பாதுகாப்புதும் மிக எளிது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட சில வாரங்களில் தங்க பத்திரங்களை அரசு விற்பனை செய்கிறது. அதன்படி இந்த மாதம் இன்று முதல் அதாவது ஜனவரி 10ம் தேதி முதல் தேதி முதல் 15ஆம் தேதி வரை தங்கப் பத்திரங்கள் விற்பனை நடைபெறும்.
ரிசர்வ் வங்கி (RBI) வெளியிடும் இந்த தங்க பத்திரங்கள் மிகவும் பாதுகாப்பான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பு நிதியாண்டில், ஒன்பதாவது சீரீஸ் இன்று (10-01-2022) தொடங்குகிறது. தங்கப் பத்திரத்தின் வெளியீட்டு விலை ஒரு கிராமுக்கு ரூ.4,791 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | கொரோனா பெருந்தொற்று பரவல்; பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!
ஆவண வடிவில் தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு மிக நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. பத்திரத்தின் மதிப்பு "ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ. 4,786 ஆக இருக்கும்" என்று மத்திய வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்திய அரசு, ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முதலீட்டாளர்களுக்கு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி வழங்க முடிவு செய்துள்ளது. தங்க பத்திரத்திற்கான கட்டணம் டிஜிட்டல் முறையில் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தங்க பத்திர திட்டத்தில், பொதுவாக ஒரு தனி நபர் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4 கிலோ வரை தங்கம் வாங்கலாம். இதே அறக்கட்டளைகள் மற்றும் பிற நிறுவனங்கள் 20 கிலோ வரை தங்கம் வாங்கிக் கொள்ள முடியும்.
இந்த தங்க பத்திரங்களுக்கு வருடத்திற்கு 2.5% வட்டி விகிதம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும். இந்த வட்டி உங்கள் வருமானமாக சேர்க்கப்பட்டு, அதற்கு நீங்கள் வருமான வரியும் செலுத்த வேண்டியிருக்கும். எனினும் வட்டி வருவாயில் டிடிஎஸ் விதிக்கப்படுவதில்லை.
இந்தியாவினை பொறுத்தவரையில் தங்கத்தின் மீதான ஆர்வம் என்பது எப்போதுமே அதிகம். குறிப்பாக தமிழகத்தில் மிக அதிகம். டிஜிட்டல் தங்கத்தின் மீது தற்போது ஆர்வம் கூடிக் கொண்டே செல்லும் நிலையில், இந்த பேப்பர் தங்கம் என்பது மிகச் சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
ALSO READ | Omicron: அறிகுறிகள் என்ன? எவ்வளவு நாட்களில் தெரியும்? முக்கிய தகவல்கள் இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR