லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலம் அரசி வெளியிட்டுள்ள சுற்றுலா இடங்கள் பட்டியலில் இருந்து தாஜ்மஹால் நீக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்திரப்பிரதேச முதல்வர் யோகிய ஆதித்யநாத் தலைமையிலான அரசு சுற்றுலாத் தலங்களுக்கான புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் உலகப் புகழ்வாய்ந்த தாஜ்மஹால் இடம்பெறவில்லை.
அதேநேரத்தில் உத்திரப்பிரதேச அரசின் இப்பட்டியலில் காசி நகரத்திற்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணரின் பிறப்பிடமான மதுராவுக்கு இரண்டாவது இடம்.
இருப்பினும், உத்திரப்பிதேச மாநில சுற்றுலாத்துறை அமைச்சகம் தாஜ் மஹாலிற்கும் அதன் சுற்றுப்பகுதியையும் மேம்படுத்தும் பல திட்டங்களை விவரிக்கும் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதன்படி உ.பி. அரசு 370 கோடி ரூபாய் மதிப்புள்ள சுற்றுலாத் திட்டங்களை அறிவித்துள்ளது. இதில் பாதியளவு தாஜ் மஹால் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளின் மேம்பாட்டிற்காக அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.