கடந்த 2 வருடமாக 260 ஏக்கர் பூங்காவை கிட்டத்தட்ட 3000க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமித்திருந்தனர். ஆக்கிரமித்தவர்களை வெளியேற்ற உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் கோர்ட்டு உத்தரவின் பெயரில் போலீஸ் நடவடிக்கை எடுத்தது. கலவரம் வெடித்தது. அங்கு தங்கியிருந்தவர்கள் போலீசாரை தாக்கினர். இந்த மோதலில் 2 போலீசார் மற்றும் 12 ஆக்கிரமிப்பாளர்கள் உயிரிழந்து உள்ளனர்.
இதனையடுத்து மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் உயிரிழந்த 2 போலீசார் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ள நிலையில் இறந்த எஸ்.பி. முகுல் திவேதியின் தாயார் அவர்கள் நியூஸ் ஏஜென்சி ஏ.என்.ஐ-விடம் " முதல்வர் அகிலேஷ் யாதவ் அவர்களே எனக்கு பணம் வேண்டாம். என் மகன் தான் வேணும்., நான் 2௦ லட்சம் தருகிறேன் என் மகனை திரும்ப தரமுடியாம?" என கண்ணீருடன் கேட்டுள்ளார்.
Mujhe paise nhi chahiye,CM mera beta lakar de dein:Mother of #Mathura SP Mukul Dwivedi who was killed in firing yday pic.twitter.com/uQVn4yMiGM
— ANI UP (@ANINewsUP) June 3, 2016
Humse le lein Mukhyamantri (CM) Rs 20 lakh, par mera beta wapas kar dein: Mother of #Mathura SP Mukul Dwivedi pic.twitter.com/O46QLE3q1P
— ANI UP (@ANINewsUP) June 3, 2016