கொரோனா மூன்றாம் அலை: PM Cares நிதியில் 1213 ஆக்ஸிஜன் ஆலைகள்

நாட்டில் கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்து வரும் போதிலும், மூன்றாவது அலை குறித்த அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது. அரசும் அதற்குத் தயாராகி வருகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 14, 2021, 08:13 AM IST
  • கோவிட் -19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,94,39,989 ஆக உயர்ந்துள்ளது.
  • கடந்த 24 மணி நேரத்தில் 80,834 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
  • நோய்த் தொற்று விகிதம் 4.25 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கொரோனா மூன்றாம் அலை: PM Cares நிதியில் 1213 ஆக்ஸிஜன் ஆலைகள் title=

நாட்டில் கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்து வரும் போதிலும், மூன்றாவது அலை குறித்த அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது. அரசும் அதற்குத் தயாராகி வருகிறது. மூன்றாவது அலையின் போது, ​​எந்தவொரு நோயாளியும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரை இழக்கக் கூடாது என்பதற்காக மத்திய அரசு முக்கிய முயற்சியை எடுத்துள்ளது.

பிஎம் கேர்ஸ்  (PM Cares) நிதியிலிருந்து நாடு முழுவதும் 1213 ஆக்ஸிஜன் ஆலைகளை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஆலை அமைக்கும் பணி அடுத்த மாதம் ஜூலை மாதத்திற்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்லது.

டெல்லியின் (Delhi) பஞ்சாபி பாக் நகரில் உள்ள மகாராஜா அக்ராசென் மருத்துவமனையில்  ஆக்ஸிஜன் ஆலையை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த, ​​மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “ நாட்டில் கொரோனாவின் மூன்றாவது அலை ஏற்ப்பட்டால், ​​முறை ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுமோ என்ற அச்சம் தேவையில்லை. ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கக்கூடாது என்பதற்காக, பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து நாடு முழுவதும் 1213 ஆக்ஸிஜன் ஆலைகளை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.

ALSO READ | TN Corona Update: தமிழகத்தில் இன்று 14,016 பேருக்கு கொரோனா தொற்று

இந்த ஆலைகளின் உற்பத்தி திறன் ஒரு நாளைக்கு 35,000 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனாக இருக்கும். மத்திய பெட்ரோலிய அமைச்சர்,  IGL வழங்கிய நிதியில் டெல்லியில் அமைக்கப்பட்ட ஆலைக்கான செலவு  2.5 கோடி என்று கூறினார்.  இந்த ஆலையில் தினமும் 400 முதல் 500 சிலிண்டர்கள் நிரப்பப்படலாம். 

கொரோனா நோய்த்தொற்றின் (Coronavirus) வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது. 71 நாட்களுக்குப் பிறகு, கொரோனா தொற்று பாதிப்பு, மிகக் குறைந்த அளவு பதிவாகியுள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் 80,834 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. நோய்த் தொற்று விகிதம்  4.25 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்த புதிய தொற்று பாதிப்புகள் மூலம், இதுவரை நாட்டில் கோவிட் -19 தொற்றினால் பாதிக்கபப்ட்டவர்களின் எண்ணிக்கை 2,94,39,989 ஆக உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில், நாட்டில் இதுவரை 25 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) வழங்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 34.84 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்களில் 31 லட்சம் பேருக்கு முதல் டோஸ் வழங்கப்பட்டது. 3 லட்சம் 80 ஆயிரம் பேருக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டது. நாட்டின் மிகப்பெரிய அளவில் மேற்கொள்ளப்படும் தடுப்பூசி போடும் பணியில், இதுவரை 25.31 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Also Read | கொரோனா தொற்றால் மனதளவில் அதிக பாதிப்பு 'இந்த' வயதினருக்கு தான்: ஆய்வு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News