இந்திய அரசியலமைப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு தினத்தில், இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய சிறந்த பெண்களுக்கும், ஆண்களுக்கும் நாம் தலைவணங்குவோம். அவர்களை எண்ணி பெருமை கொள்வோம் என அவர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அரசியலமைப்பு தினம் குறித்த சிறப்பு உரைநிகழ்த்திய வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
At 4 PM this evening, will speak about our Constitution at the valedictory function of the National Law Day celebrations in Delhi. You can watch my speech live here. https://t.co/0ElF2AFuHr
— Narendra Modi (@narendramodi) November 26, 2017
மேலும் இக்கருத்தரங்கில், இந்தியா உருவாக காரணமாக இருந்த முன்னேர்கள் அனைவரையும் நினைத்து நாம் பெருமை கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.