தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ராமச்சந்திரன் விஸ்வநாதன் யார்?

Fugitive Economic Offender: பணமோசடி தடுப்புச் சட்ட வழக்கில் தப்பியோடிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட  தேவாஸ் மல்டிமீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராமச்சந்திரன் விஸ்வநாதன் யார்?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 10, 2023, 03:36 PM IST
  • பணமோசடி தடுப்புச் சட்ட வழக்கில் தப்போயோடிய குற்றவாளி
  • தேவாஸ் மல்டிமீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சி.இ.ஓ
  • யார் இந்த ராமச்சந்திரன் விஸ்வநாதன்?
தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ராமச்சந்திரன் விஸ்வநாதன் யார்?  title=

பெங்களூரு: தேவாஸ் மல்டிமீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராமச்சந்திரன் விஸ்வநாதனை தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக (FEO) பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. அமலாக்க இயக்குநரகம் (ED) தாக்கல் செய்த பணமோசடி தடுப்புச் சட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேரில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2018 ஆம் ஆண்டு வழக்கில், இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷனிடமிருந்து பெறப்பட்ட ரூ.579 கோடியில் 85 சதவீதத்தை அமெரிக்காவுக்கு திருப்பியதாக 9 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. தொலைதூர பகுதிகளில் மல்டிமீடியா சேவைகளை வழங்குவதற்காக இஸ்ரோவின் இரண்டு செயற்கைக்கோள்களை தேவாஸ் பயன்படுத்துவதாக இருந்த ஒப்பந்தம் 2011 இல் அரசாங்கத்தால் ரத்து செய்யப்பட்டது.
 
தேவாஸ் மல்டிமீடியா 2021 இல் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தால் கலைக்கப்பட்டது. மத்திய புலனாய்வுப் பிரிவு (Central Bureau of Investigation) குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஒரு வழக்கைத் தொடங்கியது, பின்னர் அமலாக்கத்துறை, ஒரு தனி வழக்கைப் பதிவு செய்தது. இந்த வழக்கில் விஸ்வநாதன் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு கடந்த வியாழக்கிழமையன்று (2023, ஜூன் 8) நடைபெற்றபோது, தேவாஸ் மல்டிமீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராமச்சந்திரன் விஸ்வநாதனை தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக (Fugitive Economic Offender) அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

மேலும் படிக்க | உயரத்தை அதிகப்படுத்தலாம்! 88 லட்சம் ரூபாய் செலவில் 7 இஞ்ச் உயரமான ஆறடி பாடிபில்டர்

21வது கூடுதல் நகர சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிபதி, சிபிஐ வழக்குகளுக்கான சிறப்பு நீதிபதி, நீதிபதி கே.எல்.அசோக் முன்னிலையில் ஆஜாரான அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் பி.பிரசன்ன குமார், ராமச்சந்திரன் விஸ்வநாதனி சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.

ராமச்சந்திரன் விஸ்வநாதனுக்கு சம்மன் அனுப்பப்பட்டதாகவும், அவர் ஆஜராகத் தவறியதால் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது. அவருக்கு எதிராக பிறப்பிக்கபப்ட்ட ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டு (non-bailable warrant) இன்னும் செயலில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் பி.பிரசன்ன குமார், எனவே, தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் பிரிவு 2 (எஃப்) இன் கீழ் விஸ்வநாதன், தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  

ராமச்சந்திரன் விஸ்வநாதனை தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்த நீதிமன்றம், “தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டம், 2018, பிரிவு 10 மற்றும் 12ன் கீழ், 2018 மே 4, 2022 தேதியிட்ட அமலாக்க இயக்குனரகம், பெங்களூரு மண்டல அதிகாரி தாக்கல் செய்த விண்ணப்பம் அனுமதிக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட எண் 2 ராமச்சந்திரன் விஸ்வநாதன். தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்" என்று அறிவித்தது.

முன்னதாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்த அமெரிக்க குடிமகன், அமெரிக்காவின் மேக்னிட்ஸ்கி சட்டத்தின் கீழ், நிர்மலா சீதாராமன் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் அமலாக்க முகமை அதிகாரிகள் உட்பட 10 பேருக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்று அவதூறுப் பிரச்சாரம் மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி செய்தி! நாளை முதல் ரயில்களில் மிகப்பெரும் மாற்றம்

ராமச்சந்திரன் விஸ்வநாதன் மீது குற்றச்சாட்டு

2004 ஆம் ஆண்டு, UPA ஆட்சியின் போது, ​​செயற்கைக்கோள் அடிப்படையிலான மல்டிமீடியா சேவைகளை வழங்குவதற்காக பெங்களூரில் 'தேவாஸ் மல்டிமீடியா பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்தை ராமசந்திரன் விஸ்வநாதன் நிறுவினார். பிறகு, தேவாஸ் ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷனுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்,

அந்த ஒப்பந்தத்தின்படி ஆன்ட்ரிக்ஸ் ஜிசாட் 6 மற்றும் 6 ஏ ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களை உருவாக்க வேண்டும், அதே நேரத்தில் தேவாஸ் இந்திய மொபைலுக்கு மல்டிமீடியா சேவைகளை வழங்க தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களின் எஸ்-பேண்ட் டிரான்ஸ்பாண்டர்களைப் பயன்படுத்தவும் நிறுவனம் திட்டமிட்டிருந்தது.

இந்த ஒப்பந்தம் ஜெர்மனியின் Deutsche Telekom (DT) உட்பட பல முதலீட்டாளர்களின் ஆதரவைப் பெற்றது. பின்னர், ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தம் முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் ஆய்வு செய்யப்பட்டது.

எஸ்-பேண்ட் அலைக்கற்றையின் வணிகமயமாக்கல் குறித்து தேவாஸுக்கு உள் நோக்கம் இருப்பதாகவும், அது பெங்களூரைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் மூலம் மிகவும் மலிவான விலையில் பெறப்பட்டது என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில், 2ஜி ஊழல் வெளியானபோது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2011ஆம் ஆண்டில் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது என்பது ராமச்சந்திரன் விஸ்வநாதன் வழக்கின் பின்னணியாகும்.

மேலும் படிக்க | ரயில் பயணிகளின் கவனத்திற்கு!! ஜூன் 10 முதல் ரயில்களில் பெரும் மாற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News