திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்ற ஸ்ரீதேவி எதிர்பாராத விதமாக மரணமடைந்துள்ளார். முதலில் மாரடைப்புக் காரணமாக ஸ்ரீதேவி உயிரிழந்ததாகச் செய்திகள் வெளியானது. மயங்கிய நிலையில் நீர் நிரம்பிய குளியல் தொட்டியில் அவர் கிடந்தார் என கூறப்பட்டது.
இதனையடுத்து துபாய் போலீசார் தரப்பில் பிரேத பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர். அதேபோல், அந்நாட்டு போலீசாரும் மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், ஸ்ரீதேவியின் உடலைக் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இதை தொப்டர்ந்து ஸ்ரீதேவியின் பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் அறிக்கை வெளியிடப்பட்டது.
தடயவியல் அறிக்கையில் கூறியுள்ளது......!
குளியல் அறை தொட்டியில் ஸ்ரீதேவி தவறி விழுந்துள்ளார். அதிக அளவு ஆல்கஹால் உட்கொண்டு இருந்ததால் அவரால் தண்ணீரில் இருந்து எழ முடியவில்லை. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார். இது ஒரு விபத்துதான் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஸ்ரீதேவியின் உடல் இந்தியா கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்திய தூதரகம் சார்பில் துபாய் அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக இந்திய தூதர் நவ்தீப்சிங் சூரி தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், ஸ்ரீதேவியின் உடலுக்கு இன்று எம்பாமிங் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தடவியல் அறிக்கை வெளியான நிலையில், எம்பாமிங் முடிந்தவுடன் அவரது பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டு நாளை உடல் அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, ஸ்ரீதேவியின் உடல் இந்தியா வருவதற்கான துரித நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.