மிசோரம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மிசோ தேசிய முன்னணியின் தலைவர் ஜோரம்தாங்கா இன்று முதலமைச்சராகப் பதவியேற்றார்!
மிசோரம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மிசோ தேசிய முன்னணியின் தலைவர் ஜோரம்தாங்கா இன்று முதலமைச்சராகப் பதவியேற்கிறார்!
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் சென்ற மாதம் 12 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 7 ஆம் தேதி முடிவடைந்தது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவு நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஐந்து மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை கடந்த 11 ஆம் தேதி நடைபெற்றது. ஐந்து மாநிலங்களில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. தெலங்கானாவில் TRS கட்சியும், மிசோராமில் MNF கட்சியும் முன்னிலை வகிக்கின்றன.
இதனையடுத்து, மிசோரம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மிசோ தேசிய முன்னணியின் தலைவர் ஜோரம்தாங்கா இன்று முதலமைச்சராகப் பதவியேற்கிறார். ஆளுநர் மாளிகையில் பகல் 12 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில், ஆளுநர் ராஜசேகரன் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். இரண்டு முறை முதலமைச்சராக பதவி வகித்தவரான ஜோரம்தாங்கா காங்கிரஸ் அரசை அகற்றி பத்தாண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார்.
மிசோரம் கிறிஸ்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாநிலமாகும். தேவாலயங்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததும் ஜோரம்தாங்காவின் வெற்றிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.