மாஸ் காட்டும் ரஜினி!! காலா படத்தின் புதிய டிரெய்லர் வெளியானது!!

வெளியானது "காலா" படத்தின் புதிய ட்ரைலர். எப்படி பார்க்க...

Written by - Shiva Murugesan | Last Updated : May 28, 2018, 07:29 PM IST
மாஸ் காட்டும் ரஜினி!! காலா படத்தின் புதிய டிரெய்லர் வெளியானது!! title=

கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேசி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றது. வரும் ஜூன் மாதம் 7 ஆம் தேதி உலக முழுவதும் திரைக்கு வருகிறது.

மும்பையின் தாரவி பகுதியில் இருக்கும் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடும் தாதாவாக ரஜினி நடித்து உள்ளார். ரஜினிக்கு ஜோடியாக ஈஸ்வரி ராவ், சமுத்திரகனி, நானே பட்டேகர், ஹியூமா குரேஷி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன் அமைத்துள்ளார். 

முதல் பார்வை டிரெய்லர் மற்றும் காலா படத்தின் பாடல்கள் என ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து, இன்று "காலா" படத்தின் புதிய டிரெய்லர் வெளியிடப்படும் என படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்திருந்தார். இதனால் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 

தற்போது காலா படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.

ட்ரைலர்:

;

முன்னதாக, ஆனால் 7 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட "காலா" படத்தின் ட்ரைலர், சில தொழில்நுட்ப கோளாறுக் காரணமாக 7.30 மணிக்கு வெளியாகும் என தனுஸ் அறிவித்துள்ளார்.

 

 

Trending News