திருமண வாழ்க்கை என்பது அனைவருக்கும் மெத்தை மேல் நடப்பது போன்று இலகுவாக இருக்காது. இதற்காக மனைவி-கணவன் என இருவர் தரப்பில் இருந்து சில மாற்றங்களை செய்தால் மட்டுமே வாழ்க்கை மகிழ்ச்சியாகும். அப்படி, சில தம்பதிகள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த சீக்ரெட்ஸ்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
1.தினமும் நடைப்பயிற்சி:
தினமும், தம்பதிகள் இருவரும் ஒன்றாக நடைப்பயிற்சி மேற்கொள்வது கண்டிப்பாக உங்களுக்குள் இணக்கத்தை வளர்க்க உதவும். அப்படி நடைப்பயிற்சி மேற்கொள்ளும் தருணங்களில் சொல்ல மறந்த கதையை பேசலாம், கூற மறந்த அல்லது மறுத்த விஷயங்களை கூறலாம். வெளியில் இருக்கும் அந்த தூய்மையான காற்று உங்களை சுதந்திரமாக சுவாசிக்க செய்வதுடன் நன்றாக பேசவும் உதவுகிறது.
2.நன்றியுணர்வை எழுதுதல்:
ஒரு சில தம்பதிகள் ‘Gratitude Journal’ எழுதுவதை பரிந்துரைக்கின்றனர். இதில், தம்பதிகள் இருவரும் இருவரிடத்திலும் ஒரு நாளில் அவர்களுக்கு தங்கள் துணையிடம் பிடித்த 3 விஷயங்களை எழுத வேண்டும். இதனால் அவர்களின் உறவு பாசிடிவாக மாறுவதுடன் தன்னம்பிக்கையையும் பெருக்குகிறது. இப்படி எழுதுவதால், சண்டை வரும் காலங்களில் கூட, இதை எடுத்து படித்து பார்க்கும் போது அந்த சண்டை முடிந்து பாேக வாய்ப்புள்ளது.
3.வெளியில் செல்வது:
பலர், திருமணம் ஆன பிறகு டேட்டிங் செய்வதை நிறுத்தி விடுகின்றனர், அல்லது மறந்து விடுகின்றனர். எனவே, வாரத்தில் ஒரு நாள் கண்டிப்பாக எங்கேனும் வெளியில் செல்வதை வழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவது, தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பது என்று அந்த விஷயம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
4.காலை செக்-இன்:
தம்பதிகள் இருவரும், காலை உணவு சாப்பிடும் போது ஒன்றாக அமர்ந்து சாப்பிடலாம். அப்போது அவர்கள் எந்த மாதிரியான உணர்வுகளோடு இருக்கின்றனர், இன்றைய நாளில் எதை எதிர்நோக்கி காத்துக்கொண்டுள்ளனர் என்பதை கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். இதனால், அந்த நாள் பிசியாக இருந்தாலும் கூட கண்டிப்பாக ஒருவர் மீது ஒருவர் பல மடங்கு அக்கறை கொண்டுள்ளனர் என்பதை அந்த நாள் முழுக்க நினைவில் வைத்துக்கொள்வர்.
5.டிஜிட்டல் சாதனங்களை தள்ளி வைத்திருத்தல்:
ஒரு சில தம்பதிகள், தாங்கள் ஒன்றாக அமர்ந்து பேசுவதற்கு என்று குறிப்பிட்ட ஒரு நேரத்தை ஒதுக்குகின்றனர். அந்த நேரத்தில் இருவருமே டிஜிட்டல் சாதனங்களில் இருந்து தள்ளியே இருக்க ஆரம்பிக்கின்றனர். இதனால் அவர்கள் இருவரும் உண்மையான உரையாடல்களை வைத்துக்கொள்கின்றனர். இது, எதிர்காலத்தில் அவர்களுக்குள் எந்த பிரச்சனையும் வராமல் தடுக்கிறது.
6.பொதுவான பழக்கங்கள்:
ஒரு சில தம்பதிகள், ஒரே எண்ண ஓட்டங்களை கொண்டவர்களாக இருப்பர். ஒரு சிலர், அப்படியே இரு துருவங்களாக இருப்பர். இவர்கள் இருவருக்குள்ளும் பொதுவாக இருக்கும் ஒரே விஷயம், காதலாகவும் திருமண உறவாகவும் இருக்கும். ஆனால், தனிப்பட்ட விருப்பங்களை தனித்தனியாக செய்யும் போது இருவருக்குமே கடுப்பாகும். அந்த சமயத்தில், இருவருமே தங்களுக்குள் பொதுவாக இருக்கும் வேலையை சேர்ந்து செய்யலாம். உதாரணத்திற்கு சேர்ந்து சமைப்பது, வீட்டை சுத்தம் செய்வது உள்ளிட்டவற்றை செய்யலாம். இது நல்ல மெமரியாகவும் உங்கள் மனதில் பதிந்து விடும்.
மேலும் படிக்க | முகப்பருவுக்கு குட்பை-பொடுகுக்கு டாட்டா…இரண்டுக்கும் ஒரே டிப்ஸ்! என்ன தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ