7வது ஊதியக் குழுவின் முக்கிய அப்டேட் வெளியீடு: மத்திய மோடி அரசு சமீபத்தில் உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு 100 ரூபாய் கூடுதல் மானியத்தை அறிவித்துள்ளது. இதனிடையே பண்டிகை தினத்தை முன்னிட்டு மத்திய அரசு பொதுமக்களுக்கு நற்செய்தியை வழங்கியுள்ளது. அதன்படி இப்போது மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களும் தங்களின் அகவிலைப்படி அதிகரிப்புக்காக காத்திருக்கின்றனர். இதனிடையே நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். இவர்களின் இரண்டாவது அகவிலைப்படி அதிகரிப்பு பண்டிகைக்கு முன்னதாக நடக்க உள்ளது, இது ஜூலை 1 ஆம் தேதி, 2023 முதல் நடைமுறைக்கு வரும்.
அக்டோபர் 15 க்குப் பிறகு அரசு அகவிலைப்படி அதிகரிக்கலாம்:
இந்நிலையில் ஊடக அறிக்கைகளின்படி, இந்த முறை மத்திய அமைச்சரவை நவராத்திரி பண்டிகையின் போது ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Relief) அதிகரிப்பை அறிவிக்கலாம். மேலும் கடந்த சில ஆண்டுகளின் பதிவுகளைப் பார்த்தால், நவராத்திரி பண்டிகையின் போது அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை உயர்த்துவதாக அரசு அறிவித்துள்ளது. எனவே இம்முறையும் அக்டோபர் 15ஆம் தேதிக்குப் பிறகு எந்த நாளிலும் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை அரசு அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | ஓய்வுக்கு பிறகு இனி டென்ஷன் இல்லை லாட்டரி தான்.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்
அகவிலைப்படி 46 ஆக அதிகரிக்கலாம்:
தொழில்துறை தொழிலாளர்களுக்கான புதிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையிலான டிஏ கணக்கீட்டு சூத்திரத்தின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு (Central Government) 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு இருக்கலாம். இந்த உயர்வுக்குப் பிறகு, அகவிலைப்படி 46 சதவீதத்தை எட்டும். இதில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA), ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலை நிவாரணம் (DR) வழங்கப்படுகிறது. DA மற்றும் DR ஆண்டுக்கு இருமுறை அதிகரிக்கும் அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில். தற்போது, ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 42 சதவீத அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். கடந்த மார்ச் 2023 இல், டிஏ 4 சதவீதம் அதிகரித்து 42 சதவீதமாக இருந்தது. இந்நிலையில் தற்போதைய பணவீக்க விகிதத்தை கருத்தில் கொண்டு, அடுத்த டிஏ உயர்வு (Dearness Allowances Hike) 4 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநிலங்கள் டிஏவை அதிகரித்துள்ளன:
சமீபத்தில், மத்தியப் பிரதேசம், ஒடிசா, கர்நாடகா, ஜார்கண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற பல மாநில அரசுகள் தங்கள் மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தியுள்ளன.
அகவிலைப்படி உயர்வை அரசு எப்படி முடிவு செய்கிறது?
ஜூன் 2022 இல் முடிவடையும் காலத்திற்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் {All India Consumer Price Index (AICPI)} 12 மாத சராசரியின் சதவீத அதிகரிப்பின் அடிப்படையில் DA (அகவிலைப்படி) மற்றும் DR உயர்வு தீர்மானிக்கப்படுகிறது. இருப்பினும், மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் கொடுப்பனவுகளை மாற்றியமைக்கிறது. பெரும்பாலான அரசாங்கங்கள் மார்ச் மற்றும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்துள்ளன. இந்த முறையும் அது நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | அரசின் இந்த திட்டங்களில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாக கிடைக்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ