7வது ஊதியக் குழுவின் சமீபத்திய செய்திகள்: லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் நாட்களில் மற்றொரு நல்ல செய்தி கிடைக்கும். 8வது ஊதியக் குழுவில் சம்பளத்தை உயர்த்துவதற்கான புதிய ஃபார்முலா தயாராக உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஃபிட்மென்ட் ஃபாக்டரால் அதிகரிக்கும் ஊதியம் மூலம் இங்கு புதிய சூத்திரம் ஒன்றும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
18 மாத டிஏ நிலுவைத் தொகையை வழங்க மறுப்பு
எங்கள் கூட்டாளர் இணையதளமான ஜீ பிசினசின் படி, 8வது ஊதியக் குழுவுக்கான புதிய சூத்திரம் 2024க்குப் பிறகு செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில், மத்திய அரசு, ஊழியர்களுக்கு 18 மாத டிஏ அரியர் தொகையை வழங்க மறுத்தது. இதனால் ஏமாற்றமடைந்த பணியாளர்கள் தற்போது புதிய சூத்திரம் மூலம் நிவாரணம் பெறக்கூடும்.
ஒவ்வொரு ஆண்டும் வாழ்க்கைக்கான பொதுச்செலவுகள் அதிகரித்து வருகின்றன
7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2016ஆம் ஆண்டு அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஜீ பிசினஸ் வட்டாரங்களின்படி, 8வது ஊதியக் குழுவில், புதிய சூத்திரத்தின் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் ஒவ்வொரு ஆண்டும் நிர்ணயிக்கப்படும். எனினும், இந்த தகவலை அரசு உறுதிப்படுத்தவில்லை. ஒவ்வொரு ஆண்டும் வாழ்க்கைக்கான செலவு அதிகரித்து வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் ஊதியத்தை அதிகரிப்பதும் சிறந்த தேர்வாக இருக்கும்.
புதிய சூத்திரம் என்ன?
மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வுக்கு Aykroyd சூத்திரம் பரிசீலிக்கப்படலாம். தற்போது, அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ஃபிட்மென்ட் ஃபாக்டரின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி ஒவ்வொரு ஆறு மாதங்களிலும் திருத்தப்படும். ஆனால், அடிப்படை சம்பளத்தில் உயர்வு இருக்காது. புதிய சூத்திரத்தின் மூலம், ஊழியர்களின் சம்பளம், பணவீக்கம், வாழ்க்கைச் செலவு மற்றும் பணியாளரின் செயல்திறன் ஆகியவற்றுடன் இணைக்கப்படும். இவை அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் சம்பளம் உயர்த்தப்படும்.
மேலும் படிக்க | பணி ஓய்வுக்கு முன் பிஎஃப் தொகையை எடுக்க விதிகள், நிபந்தனைகள் என்ன?
புதிய சூத்திரம் ஏன் தேவை?
அனைத்து தரப்பு ஊழியர்களுக்கும் சமமான பலன்கள் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் முயற்சியாகும். தற்சமயம் ஒவ்வொருவரின் சம்பளத்திலும் கிரேடு-பேயின் படி பெரிய வித்தியாசம் இருக்கிறது. புதிய ஃபார்முலா மூலம் இந்த இடைவெளியைக் குறைக்கும் முயற்சி அரசுக்கு இருக்கக்கூடும். அரசு துறைகளில் தற்போது 14 ஊதிய தரங்கள் உள்ளன.
மத்திய ஊழியர்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதே அரசின் முக்கிய நோக்கமாகும். இதற்கு ஒரு புதிய சூத்திரம் பரிசீலிக்கப்படுவது நல்லது. எனினும், அத்தகைய சூத்திரம் இதுவரை விவாதிக்கப்படவில்லை. 8வது ஊதியக் குழுவில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தினசரி செலவுகள், அடிப்படை தேவைகளின் விலை உயர்வுக்கு ஏற்ப சம்பளம் அதிகரிக்கும்
அதிகரித்து வரும் பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில் சம்பள உயர்வு மிகவும் குறைவு. 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் போது, நீதிபதி மாத்தூர், ஊதியக் கட்டமைப்பை புதிய சூத்திரத்தை நோக்கி முன்னெடுத்துச் செல்ல விரும்புவதாக குறிப்பிட்டார். இதில் வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அய்க்ராய்ட் ஃபார்முலாவை எழுத்தாளர் வாலஸ் ரூடெல் அய்க்ராய்ட் வழங்கினார். சாமானியனின் உணவு, உடை போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வெண்டும் என அவர் நம்பினார்.
மேலும் படிக்க | ஊழியர்களே உஷார்: EPFO ஊதிய வரம்பில் மாற்றம், கையில் கிடைக்கும் சம்பளம் குறையக்கூடும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR