Activities That Singapore People Include In Daily Life : சிங்கப்பூர் மக்களுக்கென்று, தனியாக ஒரு குணம் இருக்கிறது. அவர்கள், கடைப்பிடிக்கும் சில பழக்க வழக்கங்களால் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். அவை குறித்தும், அவர்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கும் சில பழக்க வழக்கங்கள் குறித்தும் இங்கு பார்ப்போம்.
உணவு கலாச்சாரம்:
சிங்கப்பூர் மக்கள், விதவிதமான உணவுகளை தங்கள் லைஃப் ஸ்டைலில் இணைத்துக்கொண்டுள்ளனர். சிக்கன் உணவுகள் முதல், பல்வேறு ஆசிய உணவுகள் வரை அனைத்தையும் இவர்கள் தங்களின் வாழ்வில் இணைத்துக்கொள்கின்றனர்.
நாட்டில் என்ன உணவெல்லாம் ட்ரெண்டிங்கில் இருக்கிறதோ அவை அனைத்தையும் தங்கள் வாழ்விலும் இணைத்துக்கொள்கின்றனர். இது, ஒரு சமூக நிகழ்வாகவும் நடப்பதால் பலர் இதில் கலந்து கொண்டு தங்களுக்குள் இருக்கும் உறவையும் வளர்த்துக்கொள்கின்றனர்.
பொழுதுபோக்கு நடவடிக்கைகள்:
சிங்கப்பூர் மக்கள், தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க பல்வேறு நடவடிக்கைகளை முதன்மைப்படுத்துகின்றனர். அதில் ஒன்று, பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்வது. அதில், ஜாக்கிங், சைக்ளிங், பிக்னிக் செல்வது போன்ற விஷயங்களும் நடக்கும்.
வெக்கேஷன்:
சிங்கப்பூரில், மக்கள் தங்களின் குடும்பத்தினருடன் அடிக்கடி வெளியில் செல்ல பல்வேரு ஹோட்டல்கள் மற்றும் இடங்கள் இருக்கின்றன. இதற்கு பெயர் ஸ்டேகேஷன்ஸ். இங்கு வார இறுதி நாட்களில் செல்லும் அவர்கள், தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான தருணங்களை கழிக்கின்றனர்.
உடற்பயிற்சிகள்:
சிங்கப்பூர் மக்கள், யோகா, ஜூம்பா, பேட்மிண்டன், உள்ளிட்ட சில நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இதனால், இவர்கள் உடலும் மனமும் ஹெல்தியாக இருப்பதுடன், மன அழுத்தமும் குறைவதாக கூறப்படுகிறது.
சமூகத்துடன் தொடர்பு:
சிங்கப்பூரில் இருக்கும் மக்கள், புத்தாண்டு, தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் என எந்த திருநாள் வந்தாலும் அதனை ஒன்றாக, ஒரு சேர கொண்டாடுகின்றனர். உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைப்பது மட்டுமன்றி யாரென்றே தெரியாதவர்கள் அந்த பார்டியில் கலந்து கொண்டாலும் அவர்கள் இன்முகத்துடன் அவர்களை வரவேற்பார்கலாம்.
வேலை-வாழ்க்கை பேலன்ஸ்:
சிங்கப்பூரை சேர்ந்த மக்கள், தங்கள் தொழில் வாழ்க்கையையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் சரியாக பார்த்துக்கொள்கின்றனர். வர்க்-லைஃப் பேலன்ஸை கடைப்பிடிக்கும் இவர்கள் அதிக நேரம் எல்லாம் ஆஃபிஸில் செலவழிப்பதில்லை. அடிக்கடி டி-காஃபி பிரேக் எடுத்தாலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடித்து வீட்டிற்கு கிளம்பி விடுவராம்.
கொண்டாட்டங்கள்:
சிங்கப்பூர் மக்கள், தங்களின் வெற்றி மற்றும் தங்களை சேர்ந்தவர்களின் வெற்றியை கொண்டாடுகின்றனர். திருமண நாள், பிறந்தநாள் ஆகியவற்றையும் கொண்டாடுவதற்கு அவர்கள் தயங்குவதில்லை.
ஹெல்தியான வாழ்க்கை:
சிங்கப்பூர் மக்கள் பலர், யோகா, தியானம், ஸ்பா உள்ளிட்ட ரிலாக்ஸ் செய்யும் நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்தி கொண்டிருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் சாப்பிட்ட பின்பு ஹெல்தியான மூலிகை சூப் குடிப்பது, இயற்கை உணவுகளை டயட்டில் சேர்த்துக்கொள்வது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
மேலும் படிக்க | நீண்ட ஆயுள் வாழ ‘இந்த’ 1 விஷயம் இருந்தா போதும்! 124 வயது பெண் சொல்லும் சீக்ரெட்..
மேலும் படிக்க | என்ன சாப்பிட்டாலும் வெயிட் ஏறாத ஜப்பானியர்கள்! ‘இந்த’ 5 பழக்கங்கள் காரணம்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ