8வது ஊதியக் குழு: தேசிய ஓய்வூதிய முறையை மேம்படுத்த நிதிச் செயலர் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழுவை மோடி அரசு அறிவித்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், எட்டாவது ஊதியக் குழுவை அமைப்பதற்கு மோடி அரசும் கிரீன் சிக்னல் கொடுக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. 8வது ஊதியக்குழு 2023ல் அமைக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2016 இல் அமல்படுத்தப்பட்டபோது, அதற்கு பிந்தைய ஊதியக்குழு 2013 இல்தான் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்குப் பிறகும் செயல்படுத்தப்படுகின்றன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2022ல், எட்டாவது ஊதியக் குழுவை அமைப்பதற்கு மோடி அரசு ஒப்புதல் அளிக்குமா என்ற கேள்வி நிதி அமைச்சரிடம் கேட்கப்பட்டது. சம்பள கமிஷன் 2023ல் அமைக்கப்பட வேண்டி இருந்தது. அப்போது, இந்தக் கேள்விக்கு பதிலளித்த நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, 8வது ஊதியக் குழுவை அமைக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று தெரிவித்தார். கேள்வி நேரத்தின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு நிதித்துறை இணை அமைச்சர் எழுத்து மூலம் இந்த பதிலை வழங்கியிருந்தார்.
தேசிய ஓய்வூதியத் திட்டம்
தேசிய ஓய்வூதியத் திட்டம் குறித்து மோடி அரசுக்கு எந்த குழப்பமும் இல்லை. ஆகையால் மக்களவையில் நிதி மசோதா நிறைவேற்றப்பட்டபோது, அரசு ஊழியர்களுக்கான தேசிய ஓய்வூதிய முறையை மேலும் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதற்காக நிதித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்க முடிவு செய்துள்ளனர். நிதி அமைச்சரின் இந்த முடிவு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், ஆளுங்கட்சிக்கு அரசு ஊழியர்களின் வாக்குகள் மிக முக்கியமானவை. இதுபோன்ற சூழ்நிலையில் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை மேம்படுத்த ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், எட்டாவது ஊதியக் குழு அமைப்பதற்கும் மோடி அரசு சம்மதிக்கக்கூடும் என நம்பப்படுகிறது.
மக்களவைத் தேர்தலுக்கு முன், சம்பள கமிஷன் அமைக்காமல், அரசு ஊழியர்களின் அதிருப்தியை சம்பாதிக்கும் எண்ணம் அரசுக்கு இருக்காது. எதிர்கட்சிகள் இதை என்.பி.எஸ் போன்ற பெரிய தேர்தல் பிரச்சினையாக்கலாம். தேசிய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கும் இடையே ஏற்கனவே மோதல் இருந்து வந்தது. இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் போன்ற காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமலுக்கு வந்தது.
அதன்பிறகு, என்.பி.எஸ்-ஐ மறுஆய்வு செய்ய அரசாங்கம் ஒரு குழுவை அமைத்துள்ளது. அதனால்தான் எட்டாவது ஊதியக் குழுவையும் அரசாங்கம் அமைக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.
1947 முதல் பல ஊதியக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதியக் குழுவை அரசு அமைக்கிறது. இதன் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் உயர்த்தப்படுகிறது.
24 பிப்ரவரி 2014 அன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் ஏழாவது ஊதியக் குழு அமைக்கப்பட்டது. 2006 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில், ஆறாவது மற்றும் ஏழாவது ஊதியக் குழு, மத்திய ஊழியர்களின் சம்பளத்தை பெரிய அளவில் உயர்த்த பரிந்துரை செய்திருந்தது. அதை ஏற்று அரசுகளும் அரசாங்க ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தின.
44% ஊதிய உயர்வு
8 ஆவது ஊதியக் குழு அமலுக்கு வந்த பிறகு அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் உயர்வு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 7வது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 மடங்காக உள்ள நிலையில், சம்பளம் 14.29 சதவீதம் அதிகரித்து, குறைந்தபட்ச சம்பளம் 18 ஆயிரமாக உள்ளது. 8வது ஊதியக் குழு அமலுக்கு வந்தால், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 3.68 மடங்காகும். அந்த நிலையில் ஊதியம் 44.44% அதிகரிக்கும். மேலும் குறைந்தபட்ச சம்பளம் 26,000 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ