மார்பக புற்றுநோய் இருக்கா? கவலை வேண்டாம்-வீட்டிலேயே டெஸ்ட் செய்ய கருவி வந்தாச்சு!

மார்பக புற்றுநோய் இருக்கிறதா இல்லையா என்பதை வீட்டிலேயே தெரிந்து கொள்ள ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Nov 20, 2023, 06:46 PM IST
  • மார்பக புற்றுநோய் பெரும்பாலும் பெண்களைத்தான் தாக்கும்.
  • இந்த நோயை கண்டுபிடிக்க கருவி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • இதன் பெயர் ஐ-பிரெஸ்ட்
மார்பக புற்றுநோய் இருக்கா? கவலை வேண்டாம்-வீட்டிலேயே டெஸ்ட் செய்ய கருவி வந்தாச்சு! title=

மார்பக புற்றுநோய் பெண்களை அதிகமாக பாதிக்கும் நோயாகும். மார்பக புற்றுநோய் முதல் கட்டத்தில் எந்த அறிகுறிகளையும் காட்டாது. மார்பில் கட்டி போன்று உறுதியாக ஏதேனும் தோன்றினால் அது புற்றுநோய் பாதிப்பினால் ஏற்பட்டுள்ளதோ என பலருக்கு பயம் தோன்றுகிறது. பெரும்பாலான சமயங்களில்  இது சாதாரண கட்டியாகவும் இருக்கலாம். அனைத்து கட்டிகளும் புற்றுநோய் கட்டிகளாகிவிடாது. மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை மேற்கொள்வதற்கு முன்னர் இந்த நோயை முன்கூட்டியே கண்டறிந்து கொள்வது முக்கியம். அப்படி தெரிந்து கொள்ளாததுதான் மார்பக புற்றுநோய் முத்திப்போகிறது என கூறப்படுகிறது. தற்போது, மார்பக புற்றுநோயை ஐ-பிரெஸ்ட் எனும் கருவி மூலம் வீட்டிலேயே கண்டு பிடிக்கலாம்.

புற்றுநோயால் உயிரிழப்பதற்கு காரணம் என்ன? 

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தனியார் மருத்துவமனை சார்பில்  செய்தியாளர் சந்திப்பு நடைப்பெற்றது. அப்போது லேப்ரோஸ்கோபிக் மற்றும் பீடியாட்ரிக் நிபுணர் மருத்துவர் ஜெ.எஸ். ராஜ்குமார் செய்தியாளர்களிடம் பேசசினார். அப்போது "மார்பக புற்றுநோய் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட ஐந்து பெண்களில் ஒருவர் 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்கிறார். குறிப்பாக கர்ப்பப்பை புற்றுநோயை பின்னுக்குத் தள்ளி மார்பக புற்றுநோய் அதிக அளவில் பெருகி வருவதாக தெரிவித்த அவர், உலகில் ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கும் ஒரு பெண் மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுகிறார் என்றார். மார்பக புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகும் இரண்டு பெண்களில் ஒருவர் உயிரிழக்கிறார் என்றும், அதற்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு தாமதமாக கண்டறியப்படுவதே காரணம்” என்றும் அவர் கூறினார்.

மேலும், “அல்ட்ராசவுண்ட், மேமோகிராபி மற்றும் எம்ஆர்ஐ போன்ற சோதனைகள் அதிகளவு மக்கள் தொகையுடைய இந்தியா போன்ற நாடுகளுக்கு போதிய பலன் தருவதில்லை என்பதால் ஐ-பிரஸ்ட் கருவி சோதனையை எளிதாக்குவதாக குறிப்பிட்டார். இது முற்றிலும் வலியற்றது மற்றும் கதிர்வீச்சு இல்லாதது என்பதோடு மார்பக கட்டிகளை முன்கூட்டியே கண்டறியவும் உதவுகிறது.  5 நிமிடங்களில்  அனைத்து வயது பெண்களுக்கும் சோதனை செய்யும் வகையில் இந்த கருவி உருவாக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | முடி ஒல்லியா எலிவால் மாதிரி இருக்கா? அப்போ உடனே இத பண்ணுங்க

மார்பக புற்றுநோய்

ஐ-பிரெஸ்ட் கருவி..

மருத்துவர் ஜே எஸ் ராஜ்குமார் குறிப்பிடும் பொழுது துரித உணவுகள் கொழுப்பின் அளவை அதிகப்படுத்தி பெண்களுக்கு பாலின உட்புறத்தில் செயல்பாட்டை தீவிரப்படுத்துவதாகவும் இதன் காரணமாக மார்பக புற்றுநோயின் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார் மேலும் 250 மற்றும் 2075 ஆம் ஆண்டுகளுக்குள் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மார்பக புற்று நோய் பாதிக்கப்பட்டவர் இருக்கக்கூடிய வாய்ப்பு உருவாகும் என உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்திய மருத்துவ கழகம் ஆகியவை எச்சரித்துள்ளதையும் சுட்டிக்காட்டி ஆவார் தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் இலவசமாக மார்பக புற்றுநோய் முகாம் நடந்தியதில் 3000 பெண்களில் சுமார் 130பேருக்கு இதன் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு எட்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  இந்த சோதனைகளுக்கு ஐ-ப்ரஸ்ட் கருவியை பயன்படுத்தியதாகவும் இதனால் நேரம் மற்றும்செலவுகள் வெகுவாக குறைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | குளிக்கும் போது சிறுநீர் கழிப்பது நல்லதா கெட்டதா? பதில் இதோ!

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News