Vastu Remedies: வளமான வாழ்வுக்கான இந்த வாஸ்து குறிப்புகள் உங்களுக்குத் தெரியுமா?

வாஸ்து என்பது ஒரு இயற்கை அறிவியல் என்றும் புரிந்துக் கொள்ளலாம். புரிந்தவர்கள் அதன் பயனை அறிவார்கள், புரியாதவர்கள் பிரச்சனைக்கான காரணத்தை அறிய மாட்டார்கள்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 23, 2021, 05:34 AM IST
  • ஆண்களுக்கு சுகாதார பிரச்சினைகள் இருந்தால், வீட்டின் வடகிழக்கு பகுதியை சரிபார்க்கவும்
  • படிகள் அல்லது கழிப்பறை அல்லது செப்டிக் டேங்க் வீட்டின் வடகிழக்கு பகுதியில் இருக்கக்கூடாது
  • வீட்டின் தென்மேற்கு பகுதியில் படிகள் இருக்கக்கூடாது
Vastu Remedies: வளமான வாழ்வுக்கான இந்த வாஸ்து குறிப்புகள் உங்களுக்குத் தெரியுமா? title=

வாஸ்து என்பது ஒரு இயற்கை அறிவியல் என்றும் புரிந்துக் கொள்ளலாம். புரிந்தவர்கள் அதன் பயனை அறிவார்கள், புரியாதவர்கள் பிரச்சனைக்கான காரணத்தை அறிய மாட்டார்கள்.

நிம்மதியான வாழ்வுக்கு ஆரோக்கியமே ஆணிவேர். அந்த ஆணிவேரின் சக்தியாக ஊக்கமளிக்கிறது வாஸ்து. எந்தவொரு விஷயத்திலும் அனுபவம் உள்ளவர்கள் சொல்வதை ஏற்று நடந்தால் நன்மை நமக்கே. ஆனால், அதுவே யார் சொல்வதையும் அப்படியே செய்தால் அதன் எதிர்வினையையும் அனுபவிப்பதும் நாமே. எனவே எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பது வாஸ்துவுக்கும் பொருந்தும்.

ஆரோக்கியத்திற்கும் வாஸ்துவுக்கும் என்ன தொடர்பு?
கட்டுமானத் துறையில் பொறியியலாளரின் பங்கு எதுவோ, அதுபோல, வாஸ்து என்ற சாத்திரத்தை அறிந்தவர்கள் வழங்கும் ஆலோசனையை ஏற்று நடந்தால் சுகத்துடன் வாழலாம். எப்படி ஒரு மருத்துவரால் மட்டுமே நம் உடலில் உள்ள சிக்கலைக் கண்டறிந்து, நம்மிடம் உள்ள நோய்க்கு ஏற்ப சிகிச்சையளிக்க முடியுமோ, அதே வழியில், ஒரு வாஸ்து ஆலோசகர் மட்டுமே வீட்டிலுள்ள சிக்கலைக் கண்டறிந்து அதை சரிசெய்வதற்கான தீர்வையும் வழங்க முடியும்.

Also Read | இன்றைய பஞ்சாங்கம்: 2021 பிப்ரவரி 23ஆம் நாள், மாசி 11, செவ்வாய்க்கிழமை

ஒருவருக்கு தொடர்ந்து ஆரோக்கிய குறைபாடு ஏற்பட்டால், அதற்கு அவர் வசிக்கும் வீட்டின் வாஸ்துவின் தாக்கமாக இருக்கலாம்.ஒரு வேளை, நீங்கள் வீட்டைப் புதுப்பிக்கவோ அல்லது வீட்டை மாற்ற திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், இந்த வாஸ்து கொள்கைகளை அடிப்படை அறிவுறுத்தலாக ஏற்று பின்பற்றலாம்.

1. வீட்டின் வடகிழக்கு / தென்கிழக்கு (மூலையில்) / தென்மேற்கில் கழிப்பறை அமைப்பதைத் தவிர்க்கவும்.
2. பெண்களுக்கு உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால், வீட்டின் தென்கிழக்கு மூலையை சரிபார்த்து, வலுவாக்க வேண்டும்.
3. வீட்டின் தென்கிழக்கு பகுதியில் கிணறு, ஆழ்துளை கிணறு போன்றவை இருக்கக்கூடாது.
4. பிரதான நுழைவாயில் வீட்டின் தென்கிழக்கு பகுதியில் இருக்கக்கூடாது. மேலும், தென்கிழக்கு பகுதியில் எந்த செப்டிக் டேங்க் அல்லது கழிப்பறை இருக்கக்கூடாது.
5. ஆண்களுக்கு சுகாதார பிரச்சினைகள் இருந்தால், வீட்டின் வடகிழக்கு பகுதியை சரிபார்க்கவும். 
6. படிகள் அல்லது கழிப்பறை அல்லது செப்டிக் டேங்க் வீட்டின் வடகிழக்கு பகுதியில் இருக்கக்கூடாது.
7. வீட்டின் தென்மேற்கு பகுதியில் நுழைவு அல்லது படிகள் அல்லது செப்டிக் டேங்க் இருக்கக்கூடாது.

Also Read | ஆசிர்வாதம் என்பதன் அடிப்படை என்ன? அது எவ்வாறு செல்வங்களைப் பெற வழி வகுக்கும்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News