EPF Account: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு உறுப்பினருக்கும் பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உலகளாவிய கணக்கு எண் (Universal account number) அல்லது 12 இலக்க UAN எண் கொடுத்துள்ளது. EPFO சந்தாதாரர்கள் இந்த கணக்கில் சில தகவல்களை கொடுக்க வேண்டும். அனைத்து EPF தொடர்பான பரிவர்த்தனைகளுக்கும் UAN எண் கட்டாயம். பாஸ்புக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்று அப்டேட் செய்தல், முன்பணம் திரும்பப் பெறுதல் மற்றும் ஓய்வுக்குப் பிறகு இறுதித் தீர்வு போன்ற EPF தொடர்பான அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும் யுனிவர்சல் கணக்கு எண் முக்கியமானது.
மேலும் படிக்க | SCSS: சீனியர் சிட்டிசன்களுக்கு வரிச் சலுகையுடன் கூடிய சிறப்பான ஓய்வூதியத் திட்டம்!
EPFO வழிகாட்டுதல்களின்படி, உங்கள் மொபைல் எண்ணுடன் UANஐ இணைப்பது கட்டாயமாகும். உங்கள் மொபைல் எண்ணை UAN உடன் இணைத்தவுடன், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் வருங்கால வைப்பு நிதி கணக்கு பற்றிய அனைத்து தகவல்களையும் பெறுவீர்கள். நீங்கள் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் புதிய உறுப்பினராக இருந்தால், உங்கள் மொபைல் எண்ணை விரைவில் இணைக்க வேண்டும். மேலும், நீங்கள் ஒரு புதிய மொபைல் எண்ணைப் வாங்கி இருந்தால், அதை உடனடியாக உங்கள் EPFO சுயவிவரத்தில் புதுப்பிக்க வேண்டியது அவசியம். வருங்கால வைப்பு நிதி கணக்கில் சந்தாதாரர்கள் தங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை மட்டுமே EPFO இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
UAN எண்ணுடன் மொபைல் எண்ணை இணைப்பது எப்படி?
முதலில், https://www.epfindia.gov.in/site_en/index.php என்ற அதிகாரப்பூர்வ EPFO இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
பிறகு, முதல் பக்கத்தில், 'For Employees' என்ற ஆப்ஷனைக் கிளிக் செய்ய வேண்டும்
இதற்குப் பிறகு, உள்நுழைவு பக்கத்தைத் திறக்க 'உறுப்பினர் UAN/ஆன்லைன் சேவைகள்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
பின்னர் நீங்கள் உள்நுழைய UAN எண், கடவுச்சொல் மற்றும் OTP ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.
இதற்குப் பிறகு, 'தொடர்பு விவரங்கள்' விருப்பத்தை கிளிக் செய்யவும்.
பின்னர், நீங்கள் சரிபார்க்கும் விருப்பத்தை கிளிக் செய்து மொபைல் எண்ணை மாற்ற வேண்டும்
பின்னர், உங்கள் ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு, 'Get OTP' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
கோரிக்கையை சமர்ப்பிக்கவும்.
EPFO ஊதிய விவரங்களைப் பதிவேற்றுவதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது
சமீபத்தில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) முதலாளிகள் தங்கள் ஊதியம் மற்றும் உயர் ஓய்வூதிய விருப்பத்திற்கான பிற விவரங்களை பதிவேற்றுவதற்கான காலக்கெடுவை டிசம்பர் 31 வரை நீட்டித்தது. முதலாளிகள் சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு இணங்க இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி வரை சுமார் 1.8 மில்லியன் ஓய்வூதியதாரர்கள் உயர் ஓய்வூதிய விருப்பத்திற்கு விண்ணப்பித்துள்ளனர், அதில் 5.52 லட்சம் விருப்பம்/கூட்டு விருப்பங்களை சரிபார்ப்பதற்கான விண்ணப்பங்கள் இன்னும் முதலாளிகளிடம் நிலுவையில் இருப்பதாக வருங்கால வைப்பு நிதி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. நவம்பர் 4, 2022 அன்று, உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, உயர் ஓய்வூதிய விருப்பத்தைத் தேர்வுசெய்ய தகுதியுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் 4 மாதங்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பிபிஎஃப் கணக்கு இருப்பவர்களுக்கு நல்ல செய்தி! குறைந்த வட்டிக்கு கடன் வாங்க நல்ல வழி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ