இன்று டிசம்பர் மாதம் தொடக்கியுள்ளது. இந்த ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் அரசாங்கத்தால் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் தனிநபர்களின் அன்றாட நிதிச் சூழலை பாதிக்கும் வகையில் நிறைய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அது என்னென்ன மாற்றங்கள் என்று இங்கே பார்க்கலாம். இவை நேரடியாக உங்களுடைய பாக்கெட்டை பாதிக்கும்.
பொதுவாக ஒவ்வொரு மாதமும் பணம் சார்ந்த நிறைய விதிமுறைகளில் மாற்றங்கள் வருவது வழக்கம். அந்த வகையில் நவம்பர் மாதம் முடிந்து டிசம்பர் மாதம் பிறந்துள்ளது. இந்த டிசம்பர் மாதத்தில் என்னென்ன மாற்றங்கள் வருகிறது என்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இதில் முக்கியமாக சிலிண்டர் விலை, HDFC வங்கியின் ரிகாலியா கிரெடிட் கார்டு, சிம் கார்டு, யூபிஐ பரிவர்த்தனை, ஆதார் கார்டு அப்டேட் உள்ளிட்ட விதிமுறைகள் மாறுகின்றன. இதுபோன்ற நிறைய மாற்றங்கள் வருவதால் அதுபற்றி தெரிந்துகொண்டு உங்களுடைய பணத்தேவைகளை திட்டமிட்டு கொள்ளலாம்.
இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள்:
புதிய சிம் கார்டு வாங்குதல்:
சிம்கார்டு வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான விதிமுறைகளை மத்திய அரசு மாற்றியுள்ளது. இந்த புதிய விதிகளை இன்று (டிசம்பர் 1, 2023) முதல் நாடு முழுவதும் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் அமலுக்கு வந்த பிறகு, ஒரு ஐடியில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சிம்களை மட்டுமே வாங்க முடியும். மேலும், புதிய விதிகளின்படி, சிம் கார்டு விற்பனையாளர்கள் எண்ணை பதிவு செய்யும் முன் KYC செயல்முறையை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு வந்தாச்சி குட் நியூஸ்.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்
இந்தியர்கள் விசா இல்லாமல் மலேசியா செல்லலாம்:
இந்திய மற்றும் சீன மக்கள் 30 நாட்களுக்கு விசா இல்லாமல் மலேசியாவில் தங்க அந்த நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனை அந்நாட்டு பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். மலேசியாவின் சுற்றுலாவை ஊக்கமளிக்கும் விதமாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதிய மாற்றம் அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பயன்பாட்டில் இல்லாதா ஜிமெயில் கணக்குகள் நீக்கப்படும்:
கூகுள் நிறுவனம் டிசம்பர் 1 முதல் இரண்டு ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இல்லாத அனைத்து கணக்குகளும் நீக்கப்படும் என்று கூறி உள்ளது. இந்த புதிய கொள்கை தனிப்பட்ட கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும்.
சிலிண்டர் விலை:
ஒவ்வொரு மாதம்மும் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் சமையல் சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும். விரைவில் தேர்தல் வரவிருப்பதால் பொதுமக்களைக் கவரும் வகையில் சிலிண்டர் விலையை அரசு குறைக்கலாம்.
கிரெடிட் கார்டு:
தனியார் துறை வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி அதன் ரிகாலியா கிரெடிட் கார்டுக்கான விதிமுறைகளை மாற்றியுள்ளது. இந்த விதிமுறை ஓய்வறை உபயோகம் தொடர்பானது. அதாவது, இன்று முதல் லவுஞ்ச் சேவையை அணுகுவதற்கு சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
யூபிஐ ஐடி:
கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகள் வாயிலாக யூபிஐ பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. அதாவது, கடந்த ஒரு வருடத்தில் எந்த பரிவர்த்தனையும் செய்யாத யூபிஐ ஐடிகளை செயலிழக்கச் செய்யுமாறு தேசிய கொடுப்பனவு கார்பரேஷன் (NPCI) உத்தரவிட்டுள்ளது.
ஆதார் கார்டு அப்டேட்:
ஆதார் கார்டில் இலவசமாக அப்டேட் செய்ய அரசு அவகாசம் வழங்கியிருந்தது. அதற்கான கடைசி நாள் டிசம்பர் 14 ஆகும். அதைத் தாண்டினால் அப்டேட் செய்ய கட்டணம் செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க | இந்தியாவில் டிசம்பர் 1 முதல் சிம் கார்ட் வாங்க புதிய விதிகள் அமல்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ