அடிவயிறு கொழுப்பை அடியோடு கரைக்க... காலையில் இந்த 4 விஷயங்களை கரெக்டா செய்யுங்க!

Health Tips For Weight Loss: அடிவயிறு கொழுப்பையும், இடுப்பு பகுதியில் இருக்கும் கொழுப்பை விரைவாக குறைக்க இந்த நான்கு விஷயங்களை காலையில் எழுந்த உடன் செய்ய வேண்டும்.

Written by - Sudharsan G | Last Updated : Nov 17, 2024, 03:26 PM IST
  • உடல் பருமன் இப்போது பலருக்கு கவலையை அளிக்கிறது.
  • இது நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் ஆகியவற்றுக்கு வழிவகுக்கலாம்.
  • எனவே, உடல் எடையை குறைக்க பலரும் முயற்சிக்கின்றனர்.
அடிவயிறு கொழுப்பை அடியோடு கரைக்க... காலையில் இந்த 4 விஷயங்களை கரெக்டா செய்யுங்க! title=

Health Tips For Weight Loss In Tamil: இளம் வயதிலேயே தொப்பையுடன் இருக்கும் பல பேரை இப்போது பார்க்க முடிகிறது. வாழ்க்கை முறை மாற்றம், ஆரோக்கியமற்ற உணவுகளின் அதிகமான புழக்கம் ஆகியவை இதற்கு முக்கிய காரணம் என்றாலும், ஒரு சிலருக்கு உடல்வாகும் அப்படியிருப்பதை மறுக்க முடியாது. இருப்பினும், இதனால் கவலைக்கொள்ள தேவையில்லை. ஆரோக்கியமற்ற உணவுகளை கைவிட்டு, ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்றினாலே உடல் எடையை எளிமையாக குறைக்கலாம். 

அடிவயிற்றில் அதிக கொழுப்புகள் சேர்வது நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் ஆகியவற்றுக்கு வழிவகுக்கலாம். எனவே, வாழ்க்கைமுறையில் இந்த மாற்றங்களை உடனடியாக கொண்டுவருவது நல்லது. அதாவது, தொப்பையை, இடைப்பகுதியில் அதிகமாக இருக்கும் கொழுப்பை குறைக்க நினைப்பவர்கள் காலையில் எழுந்ததும் இந்த 4 நடவடிக்கைகளை தவறாமல் செய்ய வேண்டும். தொடர்ச்சியாக மற்றும் பொறுமையாக இந்த 4 விஷயங்களையும் செய்து வந்தாலே அடிவயிறு கொழுப்பு கடகடவென குறையும். 

உடற்பயிற்சி

இது எல்லோரும் சொல்வது தானே என நினைக்காதீர்கள். உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் கொழுப்பை குறைக்க நினைப்பது எளிதானது அல்ல. உடற்பயிற்சி செய்வதே உங்களின் வளர்ச்சிதை மாற்றத்திற்கு உந்துசக்தியாக அமையும். இதுதான் ஆற்றலை அதிகரிக்கச் செய்து, கொழுப்பை கரைக்க உதவும். நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி, யோகா, பளூதூக்குதல் போனறவை உங்களின் இன்சுலின் அளவை சீராக்கி, மெலிதான உடல்வாகுக்கு மாற்றும். எனவே, காலையில் எழுந்ததும் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதை மனதில் திடமாக வைத்துக்கொள்ளுங்கள். இதுதான் முதன்மையான ஒன்றாகும்.

மேலும் படிக்க | ஜிம்முக்கே போகாமல் ஜூஸ் மூலம் உடல் எடை, கொலஸ்ட்ராலை குறைக்கலாம்..!

வெயிலில் தலைகாட்டுங்கள்

அதே நேரத்தில் இளம் வெயில் நேரத்தில் வெளியில் சுற்றுங்கள். இது வைட்டமிண் டி உருவாக உடலில் வழிவகுக்கும். வைட்டமிண் டி வளர்ச்சிதை மாற்றத்தையும், கொழுப்பு விநியோகத்தையும் சீராக வைத்திருக்கும். அதுவும் காலையில் 6-7 மணி வெயிலில் நீங்கள் செல்வதால் இன்சுலின் சுரக்கும் அளவு சீராகும், கொழுப்பை கரைக்க உதவும். 

இந்த பானங்களை குடிங்க

தினமும் காலையில் எழுந்த உடன் எலுமிச்சை நீரை பருகவும். இது செரிமானத்தை சீராக வைக்கவும், வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டவும், உடல் எடையை குறைக்கவும் உதவும். மேலும், இந்த பானத்தை பருகுவதால் உடல் நீர்ச்சத்துடன் இருக்கும், தொப்பை கொழுப்பும் கரையும். 

புரதச்சத்து நிறைந்த காலை உணவு

உங்களின் காலை உணவில் புரதச்சத்து அதிகம் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ளுங்கள். அதிலும் முட்டைகள், கிரீக் யோகர்ட் மற்றும் அவகாடோ போன்ற உணவுகளில்  அதிக புரதச்சத்து இருக்கிறது. இது உங்களுக்கு வயிறு நிறைந்த உணவர்வை தரும், நொறுக்குத்தீனிகளின் பக்கம் திசை திருப்பாது. காலையில் இனிப்பான உணவுகளை தவிர்த்து இதுபோன்ற புரதச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்வது தொப்பை கொழுப்பை கரைக்கும்.

மேலும் படிக்க | காலையில் வெறும் வயிற்றில் கிரீன் டி குடிக்கவே கூடாது..! எப்போது குடிக்க வேண்டும் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News