7வது சம்பள கமிஷன் டிஏ உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. அரசாங்கம் சமீபத்தில் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது. அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில், லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு மேலும் ஒரு பரிசை வழங்கியுள்ளது. இப்போது மீண்டும் ஊழியர்களின் அகவிலைபப்டியில் 4 சதவிகித அதிகரிப்பு ஏற்படும். அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரிக்கும் போக்கு தொடரும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2 முறையாக அரசு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி வரும் நிலையில், ஜூலை மாதத்தில் மீண்டும் அகவிலைப்படியை அரசு 4 சதவீதம் உயர்த்தக்கூடும். இது குறித்து விரிவாக இந்த பதிவில் காணலாம்.
ஊழியர்களின் டிஏ 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது
ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34 சதவீதமாக இருந்தபோது, முதல்முறையாக அரசு டிஏ-வை 4 சதவீதம் உயர்த்தியது. அதன்பிறகு ஊழியர்கள் பெறும் டிஏ 38 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தற்போது அரசு மீண்டும் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தியதால் இது 42 சதவீதமாக அதிகரித்தது.
ஏஐசிபிஐ அறிக்கையை வெளியிட்டது
அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (ஏஐசிபிஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில், மோடி அரசு ஜூலை மாதத்தில் அகவிலைப்படியை மீண்டும் 4 சதவீதம் அதிகரிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது, ஏஐசிபிஐயின் இறுதிப் புள்ளி விவரங்கள் இன்னும் வரவில்லை.
மேலும் படிக்க | அடி தூள்!! 8th Pay Commission அமலுக்கு பின் அதிரடி ஊதிய உயர்வு: அறிவிப்பு எப்போது?
முழுமையாக ரூ.27,000 உயர்வு கிடைக்கும்
ஒரு ஊழியரின் அடிப்படைச் சம்பளம் ரூ.18,000 எனில், அவருடைய சம்பளத்தில் மாதம் ரூ.720 உயர்வு இருக்கும். அதாவது ஆண்டு அடிப்படையில் ஊழியர்களின் சம்பளம் ரூ.8640 ஆக உயர்த்தப்படும். மறுபுறம், ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மாதம் ரூ. 56,900 என்றால், அவர்களின் மாத சம்பளம் ரூ. 2,276 அதிகரிக்கும், அதாவது ஆண்டு அடிப்படையில் சம்பளம் ரூ. 2,7312 அதிகரிக்கும். சம்பள உயர்வு குறித்த அறிவிப்பை விரைவில் அரசு வெளியிடலாம்.
ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் அடிப்படையில் அதிகரிப்பு இருக்கும்
மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ஃபிட்மென்ட் ஃபாக்டரின் அடிப்படையில் அதிகரிக்கிறது. 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி, சம்பள அலவன்ஸ்கள் தவிர, மத்திய ஊழியர்களின் சம்பளம், அடிப்படை சம்பளத்தில் ஃபிட்மெண்ட்ட் ஃபாக்டர் மூலமே அதிகரிக்கிறது. இதற்கு முன்னர் ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரித்தபோது, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் இரண்டரை மடங்கு உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் ஃபிட்மென்ட் பேக்டரை அதிகரிக்க வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் அடிப்படை சம்பளம் மற்றும் மொத்த சம்பளத்தை உயர்த்துவது அவசியம் அன்பது அவர்களது கருத்தாக உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ