How To Quit Drinking And Smoking : மதுப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கம் இவை இரண்டுமே உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பழக்கங்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இதை சிலர் விளையாட்டுத்தனமாக ஆரம்பித்திருக்கலாம். சிலர், எதிலிருந்தாவது மீண்டு வரவேண்டும் என்பதற்காக இந்த பழக்கத்தை ஆரம்பித்திருப்பார்கள். இதை விட நினைத்தாலும் பல சமயங்களில் தங்கள் நிதானத்தை இழந்து, அந்த பழக்கங்களிடமே சென்று சரணடைவார்கள். இந்த பழக்கத்தை எப்படி விட்டொழிப்பது? இதோ சில டிப்ஸ்.
1.சரியான இலக்குகள்:
>முதலில், உங்களுக்கு ஏன் இந்த பழக்கத்தை விட வேண்டும் என்று தோன்றியதோ அந்த காரணத்தையே மோட்டிவேஷனாக வைத்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியம், நிதி பாரம், குடும்பம் என அந்த காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
>நினைத்தவுடன் இந்த பழக்கத்தை விட்டுவிட முடியாது. எனவே, இதற்கென்று நெருங்கிய தேதி ஒன்றை நிர்ணயித்து அந்த தேதியில் அதை விட்டுவிடுங்கள்.
2.திட்டம்:
>அந்த பழக்கத்தை மீண்டும் தொட வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம், அதை எப்படி கையாள போகிறீர்கள் என்பதை நிர்ணயித்து கொள்ளுங்கள்.
>ஆரோக்கிய நிபுணர்கள் அல்லது மருத்துவர்களிடம் உதவி கேட்பதில் எந்த தவறும் இல்லை. அவர்களிடம் ஆலோசனை, மருந்துகள் ஆகியவற்றை பெற்று கொள்ளலாம்.
3.ஆதரவு தருபவர்கள்:
>நீங்கள் மது குடிப்பதையும், புகைப்பிடிப்பதையும் நிறுத்திவிட்டீர்கள் என்பதை உங்கள் நண்பர்களிடம் தெரிவியுங்கள். அவர்கள், உங்களுக்கு தகுந்த நேரத்தில் ஆதரவு கொடுப்பர்.
>உங்களை போல, பழக்கங்களை விட நினைப்பவர்கள் மற்றும் பழக்கத்தில் இருந்து மீண்டவர்களின் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். இது, உங்கள் பழக்கத்தை தொட விடாமல் இருக்க நல்ல உந்துதலை ஏற்படுத்தும்.
4.தூண்டுதல்களை தவிர்க்கவும்:
>ஏதாவது குறிப்பிட்ட இடங்கள், சூழல், நேரம் போன்றவை உங்களை அந்த பழக்கங்களை மீண்டும் செய்ய தூண்டலாம். எனவே, அது போன்ற தூண்டுதல்களை எதிர்கொள்வதை தவிர்க்கவும்.
>உங்கள் வாழ்க்கை முறைகளை மாற்றுவதும் மிகவும் முக்கியமாகும். குடிப்பழக்கமும், புகைப்பழக்கமும் உங்களுக்கு முதலில் ஒரு நாளின் அங்கங்களாக இருந்திருக்கலாம். இப்போது அப்படி இல்லை அல்லவா? எனவே, புதிய நல்ல பழக்கங்களை ஏற்படுத்தி, உங்கள் மனதை சாந்தப்படுத்த முயற்சி செய்யுங்கள்.
5.மாற்றல் வழிகள்:
>உங்கள் குடிப்பழக்கம் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு மாறுதலாக உங்கள் மன அழுத்தத்தை குறைக்க வெவ்வேறு வழிகளை தேர்ந்தெடுங்கள்.
>அந்த பழக்கத்தை தொடர் வேண்டும் என்று ஆசை ஏற்படும் போதெல்லாம், அதற்கு மாற்றாக வேறு எதையாவது செய்யலாம். உதாரணத்திற்கு மது குடிக்க தோன்றினால், ஃப்ரெஷ் ஜூஸ் அருந்துங்கள். சிகரெட் பிடிக்க தோன்றினால், சிவிங்கம் சாப்பிடுங்கள்.
6.உங்கள் முன்னேற்றத்தை பார்வையிடுங்கள்:
>ஒரு டைரி அல்லது ஜர்னலை தேர்ந்தெடுத்து, எத்தனை நாட்கள் தீய பழக்கங்களின் பக்கம் செல்லாமல் இருக்கிறீர்கள் என்பதை பாருங்கள். சிறிய சிறிய வெற்றியாக இருந்தாலும் அதை நினைத்து பெருமை கொள்ளுங்கள்.
>இந்த பழக்கங்களை விட்டதில் இருந்து உங்களுக்குள் ஏற்படும் நல்ல மாற்றங்களை திரும்பி பாருங்கள்.
மேலும் படிக்க | வாழ்வில் உருப்பட விரும்பினால் ‘இந்த’ 6 பேரை ப்ளாக் பண்ணுங்க!! யார் யார் தெரியுமா?
7.உங்களை நீங்கள் நன்றாக பார்த்துக்கொள்ளுதல்:
>ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமாகும். தினசரி உடற்பயிற்சி, பாலன்ஸ் ஆன டயட் எடுத்துக்கொள்வது, தினமும் 7-8 மணி நேரங்கள் தூங்குவது ஆகியவற்றை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.
>மன அழுத்தத்தின் காரணமாகத்தான் முதலில் அந்த தீய பழக்கத்தின் மீது கை வைத்தவராக இருப்பீர்கள். எனவே, அதனை கையாள, உங்கள் மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வர வேறு வழிகளை தேர்ந்தெடுங்கள்.
8.நிதானம்-தொடர்ச்சி:
>தீய பழக்கங்களை தலை முழுகுவதில் உங்களுக்கு மிகவும் தேவையானதில் ஒன்று நிதானம் மற்றும் அமைதி ஆகும். வாழ்வில் எங்கோ பின்வாங்கியது போல சில சமயங்களில் தோன்றும். ஆனால், உங்கள் இலக்கை நோக்கி தொடர்ச்சியாக நீங்கள் பயணிப்பது உங்கள் கைகளில் இருக்கிறது.
>இதையெல்லாம் கடந்து, உங்களுக்கு இந்த பழக்கத்தை விடுவதற்கு கடினமாக இருந்தால், மனநல ஆலோசகர்கள் மற்றும் நிபுணர்களிடம் சென்று பேசுவதில் தயக்கம் காட்ட வேண்டாம்.
மேலும் படிக்க | டாக்ஸிக் காதலில் இருந்து பிரிவது எப்படி? 8 வழிகளை பின்பற்றுங்கள்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ