எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கான எச்சரிக்கை இது. பாரத ஸ்டேட் வங்கி (SBI) நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியாகும். மேலும் இது ஆயிரக்கணக்கான கிளைகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிறது.
எஸ்பிஐ வங்கி அதன் பரந்த கிளை நெட்வொர்க்குகளுடன், நாட்டின் கிராமப்புற மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு வெற்றிகரமாக உதவி வருகிறது. இத்தகைய மக்களின் முதன்மையான வங்கியாக எஸ்பிஐ உள்ளது. அதன் வரம்பினால் மட்டுமல்ல, இந்திய மக்களில் பெரும் பகுதியினரிடையே வங்கி கொண்டிருக்கும் நம்பிக்கையின் காரணமாகவும் உள்ளது. எனவே, எஸ்பிஐ கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு சேவை செய்வதால், அதன் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய காலப்போக்கில் பல திட்டங்களை கொண்டு வந்தது.
இப்போது, பல எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புக் கணக்குகளில் இருந்து ரூ.295 கழிக்கப்பட்டுள்ளதாகவும், அது திரும்ப வரவு வைக்கப்படவில்லை என்றும் பல்வேறு தளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர். உங்கள் பாஸ்புக் அல்லது வங்கி அறிக்கையிலும் இதை நீங்களும் கவனித்திருக்கலாம். எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள், பரிவர்த்தனை எதுவும் செய்யாமல் வங்கியில் இருந்து ஏன் அந்த தொகை கழிக்கப்பட்டுள்ளது என கவலைக்கொண்டிருக்கிறார்கள். நீங்களும் இதுபோன்ற சிக்கலை எதிர்கொண்டிருந்தால், உங்களுக்கான பதில் எங்களிடம் உள்ளது.
உண்மையில், NACH நடைமுறையின் காரணமாக உங்கள் கணக்கில் இருந்து பணம் கழிக்கப்பட்டது. இதைப் புரிந்து கொள்ள, நீங்கள் முதலில் NACH என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். National Automated Clearing House (NACH) என்பது அவ்வப்போது செய்யப்படும் பணப்பரிவர்த்தனையை எளிதாக்க National Payments Corporation of India (NPCI) என்ற அமைப்பால் உருவாக்கப்பட்டது.
ஆதாவது, NACH என்பது உங்கள் கணக்கில் இருந்து மாதத் தவணைகளை (EMI) தானாக செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. எனவே, நீங்கள் மாதத் தவணை முறையில் எதையாவது வாங்கும்போதோ அல்லது கடன் வாங்கும்போதோ, அந்தத் தொகை உங்கள் சேமிப்புக் கணக்கில் இருந்து ஒரு குறிப்பிட்ட தேதியில் எடுக்கப்படும். எனவே, அந்த குறிப்பிட்ட தேதிக்கு ஒரு நாள் முன்னதாகவே உங்கள் கணக்கில் போதுமான இருப்பை வைத்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு, ஒவ்வொரு மாதமும் 5ஆம் தேதி EMI கழிக்கப்பட வேண்டுமென்றால், 4 ஆம் தேதி முதல் அந்தத் தொகை உங்கள் கணக்கில் இருக்க வேண்டும்.
வங்கியில் நீங்கள் போதுமான இருப்பை பராமரிக்கத் தவறினால், வங்கி ரூ. 250 அபராதம் விதிக்கும். இந்த அபராதத்திற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டியும் உண்டு. எனவே, 250 ரூபாயில், 18 சதவீதம் என்றால் 45 ரூபாய். மொத்தத் தொகை 250 + 45 = ரூ. 295. எனவே, மாதத் தவணைக்கு செலுத்தப்பட வேண்டிய பணம், உங்கள் வங்கிக் கணக்கில் இல்லையென்பதால், இந்த ரூ. 295 அபராதமாக விதிக்கப்படுகிறது. எனவே, உங்கள் சேமிப்புக் கணக்கிலிருந்து உங்கள் பணத்தை இழப்பதைத் தடுக்க விரும்பினால், மாதத் தவணை தேதிகளுக்கு முன்பு, உங்கள் கணக்கில் போதுமான பணத்தை வைத்திருங்கள்.
மேலும் படிக்க | பழைய 5 ரூபாய் நாணயங்களை ரிசர்வ் வங்கி ஏன் நிறுத்தியது தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ