8வது ஊதியக்குழு, சமீபத்திய செய்தி: மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய மோடி அரசாங்கம் அடுத்தடுத்து பல நல்ல அறிவிப்புகளை வெளியிடவுள்ளது. பல நாட்களாக மத்திய அரசு ஊழியர்கள் பல கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர். 18 மாத நிலுவைத் தொகையை அளிப்பது, 8 ஆவது ஊதியக்குழுவை அமைப்பது, பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவது ஆகியவை இவற்றில் முக்கியமான கோரிக்கைகளாகும்.
இவற்றில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த கருத்துகளை கேட்டு, தேசிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள குறைகளை போக்க அரசாங்கம் ஒரு குழுவை அமைத்துள்ளது. 18 மாத நிலுவைத் தொகை குறித்த எதிர்பார்ப்புகள் இன்னும் ஊழியர்களுக்கு உள்ளன. அடுத்த கோரிக்கை 8 ஆவது ஊதியக்குவை அமைப்பது. இது கண்டிப்பாக அமைக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. அப்படி நடந்தால் அது ஊழியர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும். இதனால் அவர்களின் ஊதியத்தில் பம்பர் உயர்வு இருக்கும். இதற்கான கோப்பு உருவாக்கப்படு வருவதாகவும், இது குறித்த முக்கிய அறிவிப்பை அடுத்த ஆண்டு மோடி அரசு வெளியிடக்கூடும் என்றும் கூறப்படுகின்றது.
2024 இல் நாட்டில் பொதுத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. ஆகையால், ஊழியர்களை மகிழ்விக்கும் வகையில் அரசு புதிய ஊதியக்குழுவை அமைக்க சம்மதம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 8 ஆவது சம்பள கமிஷன் மூலம் ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய உயர்வு இருக்கும். இந்த விஷயத்தில் அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது தெளிவாக உள்ளது. மேலும், புதிய ஊதியக் குழுவில் என்ன இருக்கும் என்ன இருக்காது என்பதை இப்போது கூற முடியாது என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் அரசு சில மாறுதல்களை செய்யக்கூடும். எனினும், இதற்கான முழுப்பொறுப்பையும் ஆணையத்தின் தலைவரே ஏற்றுக்கொள்வார்.
ஊதியக் குழுவின் புதிய தலைவர்
2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, ஊதியக் குழுவின் புதிய தலைவரும் அறிவிக்கப்படலாம். அவரது மேற்பார்வையில் கமிட்டி அமைக்கப்பட்டு அதன் பிறகு சம்பள உயர்வு எப்படி என்பது முடிவு செய்யப்படும்.
மேலும் படிக்க | 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் காட்டில் மழை.. டிஏ வடிவில் வரும் வரம்
8வது சம்பள கமிஷன் எப்போது வரும்?
எட்டாவது ஊதியக் குழு 2024 இல் அமைக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், இது ஒரு வருடத்தில் செயல்படுத்தப்படலாம். இது நடந்தால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் உயர்வு ஏற்படும் என நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். 8வது ஊதியக் குழுவில் தனித்துவமான பல மாற்றங்கள் செய்யப்படலாம். ஃபிட்மெண்ட் ஃபாக்டரும் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தலாம். இதுவரையிலான போக்கை பார்த்தால் அரசாங்கம் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசு ஊதியக் குழுவை அமைக்கிறது.
8வது ஊதியக்குழுவில் சம்பளம் எவ்வளவு உயரும்?
7வது ஊதியக்குழுவில் இருந்து 8வது ஊதியக்குழு வேறுபட்டதாக இருக்கும். எல்லாம் சரியாக நடந்தால், ஊழியர்களின் சம்பளத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்தை நாம் காணக்கூடும். ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.68 மடங்கு அதிகரிக்கும். ஃபார்முலா எதுவாக இருந்தாலும், ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 44.44% அதிகரிக்கலாம். எனவே, இது ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருந்தது.
விரைவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிக்கும்
8வது ஊதியக்குழு விரைவில் அமைக்கப்படலாம் என நம்பப்படுகிறது. தேர்தலுக்கு முன் புதிய ஊதியக்குழு அமைப்பது குறித்து அரசு சில முக்கிய முடிவுகளை எடுக்கலாம். இதனுடன், ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டரும் அதிகரிக்கலாம். முன்னதாக 2016-ம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் பெரிதாக உயர்த்தப்பட்டது. அதே நேரத்தில் ஏழாவது ஊதியக் குழுவும் அமல்படுத்தப்பட்டது. ஏழாவது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டதன் மூலம், ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் 6,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ