ரெஸ்யூமில் ‘இந்த’ விஷயம் இருந்தா..எல்லா வேலையா இருந்தாலும் ஈசியா கிடைக்கும்!!

Important Things On Resume : வேலை தேடுபவர்கள், கண்டிப்பாக அவர்களது ரெஸ்யூமில் சில விஷயங்களை சேர்த்துக்கொண்டால் எந்த வேலையாக இருந்தாலும் கண்டிப்பாக கிடைத்து விடும். அவை என்னென்ன தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Sep 2, 2024, 04:12 PM IST
  • ரெஸ்யூம் தயார் செய்ய டிப்ஸ்!
  • எந்தெந்த விஷயங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும்?
  • முழு விவரம்!
ரெஸ்யூமில் ‘இந்த’ விஷயம் இருந்தா..எல்லா வேலையா இருந்தாலும் ஈசியா கிடைக்கும்!! title=

Important Things On Resume : வேலை தேடுபவர்களுக்கு மட்டுமன்றி, ஏற்கனவே வேலை பார்த்துக்கொண்டு இருப்பவர்களுக்கும் புதிதாக வேலைக்கு செல்ல இருப்பவர்களுக்கும், ரெஸ்யூம் என்பது மிகவும் அவசியம். இதை சரியாக  தயார் செய்து ஒரு நிறுவனத்திற்கு விண்ணப்பித்தால்தான், நமக்கு நேர்காணலுக்கும், அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கும் கால்-பேக் வரும். எனவே, ஒரு ரெஸ்யூமில் என்னென்ன கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

தொடர்பு தகவல்:

>முழு பெயர்: உங்களது முழு பெயரையும், எழுத்து பிழை இன்றி ரெஸ்யூமின் மேல் இடத்தில் அமைத்திருக்க வேண்டும். 

>தொலை பேசி எண்: நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கும் தொலை பேசி எண்ணை சுய விவர குறிப்பில் எழுதியிருக்க வேண்டும். 

>மின்னஞ்சல் முகவரி: நீங்கள் அலுவலகங்களுக்கு, அல்லது வேலை சார்ந்த விஷயங்களுக்கு பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரியை ரெஸ்யூமில் இணைத்திருக்க வேண்டும். 

>போர்ட்ஃபோலியோ: நீங்கள் ஏற்கனவே செய்த வேலைகளுக்கான போர்ட்ஃபோலியோவின் லிங்கை இதில் இணைத்திருக்க வேண்டும். உங்களிடம் இருக்கும் LinkedIn Profile-ன் லிங்கையும் இணைத்திருக்க வேண்டும். 

தொழில்முறை சுருக்கம்:

>உங்கள் திறன், நீங்கள் முன்னர் செய்த வேலைகள், நீங்கள் சாதித்திருக்கும் விஷயங்களை சுருக்கமாக ஒரு பத்தியில் எழுதியிருக்க வேண்டும். இது, நீங்கள் விண்ணப்பித்திருக்கும் வேலைக்கு சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும். 

>ஏன் இந்த வேலையை பார்க்க விரும்புகிறீர்கள்? நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எந்த வகையில் பயன் உள்ளவராக இருப்பீர்கள் என்பதை இதில் குறிப்பிட வேண்டும். 

முக்கிய திறன்கள்:

>உங்களுக்கு இருக்கும் திறன்கள், நீங்கள் இதுவரை கற்றுக்கொண்ட திறன்கள், அந்த திறனை வைத்து நீங்கள் சாதித்த விஷயங்கள் குறித்து குறிப்பிட்டிருக்க வேண்டும். 

>முக்கிய வார்த்தைகள்: நீங்கள் விண்ணப்பித்திருக்கும் வேலைக்கு ஏற்ற முக்கிய வார்த்தைகளை இந்த பத்தியில் குறிப்பிட்டிருக்க வேண்டும். உதாரணத்திற்கு, தட்டச்சு தொடர்பான வேலைக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், அது சம்பந்தமாக கற்று வைத்திருக்கும் திறன்களை குறிப்பிட வேண்டும்.
தொழில் அனுபவம்:

Resume Creation

>இதற்கு முன்னர் ஏதேனும் நிறுவனத்தில் வேலை பார்த்திருந்தால் (Internship Or Job) அதை குறிப்பிட வேண்டும். அந்த நிறுவனத்தின் பெயர், உங்கள் பதவியின் பெயர், எப்போது முதல் எப்போது வரை வேலை பார்த்திருக்கிறீர்கள் என்பதை குறிப்பிட்டிருக்க வேண்டும். 

>நீங்கள் இதற்கு முன்பு இருந்த வேலையில், உங்களது பொறுப்பு என்ன, நீங்கள் அந்த பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு சாதித்தவற்றை குறிப்பிட வேண்டும். 

மேலும் படிக்க | Resume-ஐ ‘இப்படி’ தயார் செய்தால் சட்டுனு வேலை கிடைக்கும்! டிப்ஸ் இதோ..

படிப்பு:

>பட்டப்படிப்பு: இளங்கலை படிப்பு படித்திருந்தால், எங்கு படித்தீர்கள், என்ன பட்டப்படிப்பு படித்தீர்கள் என்பதை குறிப்பிட வேண்டும். முதுகலை படித்திருந்தால் அதையும் குறிப்பிட வேண்டும். 

>ஏதேனும் ட்ரெயினிங் அல்லது பட்டப்படிப்பு அல்லாத வேறு படிப்பை படித்திருந்தாலும் அதை இதில் குறிப்பிட வேண்டும். 

>இவை இரண்டிலுமே, எந்த காலத்தில் இருந்து எந்த காலம் வரை படித்தீர்கள் என்பதை குறிப்பிட்டிருக்க வேண்டும்.

புகைப்படம் அவசியமா? 

ரெஸ்யூமில் புகைப்படம் வைத்துக்கொள்வதும், வைக்காமல் இருப்பதும் நமது விருப்பம், வெளிநாடுகளில் புகைப்படத்தை சுய விவரக்குறிப்பில் அமைப்பதை தவிர்க்கின்றனர். காரணம், அவை தோற்றத்தின் அடிப்படையிலான தோற்றத்தின் அடிப்படையிலான பாரபட்சமான சூழ்நிலையை உருவாக்கலாம் என்பதால்தான். இதனால், பல சமயங்களில் வேலைக்காக நேர்காணல் செய்பவர் தவறான ஆளை அந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கலாம். இதற்கு, ஒரு சில நாடுகளில் தடையே விதிக்கப்பட்டிருக்கிறது. 

இந்தியாவை பொறுத்தவரை பலர், தங்களது சுயவிவரக்குறிப்பில் புகைப்படங்கள் இணைக்கின்றனர். ஆனால், அப்படி வைத்துக்கொள்வது அவசியமில்லை. நீங்கள் உங்கள் சுய விவரக்குறிப்பை அனுப்பிய பிறகு உங்கள் நேர்காணல் செய்பவர் புகைப்படத்தை இணைத்து அனுப்புமாறு கூறினால், அப்போது வேண்டுமானால் அனுப்பலாம். 

*கவனிக்கத்திற்கு* ரெஸ்யூமில் எப்போதும் பொய் கூற கூடாது. கூறினால், நேர்காணலில் உங்கள் மீது தவறான எண்ணம் உண்டாகலாம். நீங்கள் சுய விவரக்குறிப்பை எப்படி தயார் செய்தாலும், எப்படி ஒரு நேர்காணலை எதிர்கொள்கிறீர்கள் என்பதை வைத்துதான் உங்களுக்கு வேலை கிடைப்பது உறுதி செய்யப்படும். 

மேலும் படிக்க | OMG!... தான் விரும்பிய பெண்ணுடன் டேட்டிங் செல்ல CV அனுப்பிய இளைஞர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News