கோடை விடுமுறை என்பதே சுற்றுலா பயணத்திற்கான காலம். மனதிற்கு பிடித்த இடங்களுக்கு குடும்பத்தினருடன் பயணம் மேற்கொள்ள, அனைவரும் திட்டமிடும் காலம் இது. அந்த வகையில் வெளிநாட்டிற்கான பயணத்தைத் திட்டமிடும் இந்திய சுற்றுலாப் பயணிகள் தெரிந்து கொள்ள வேண்டிய விசா தொடர்ப்பான முக்கிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
இந்த ஆண்டில் விசா விதிமுறைகள் தொடர்பான சில மாற்றங்கள் குறித்த முக்கிய சில தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இலங்கை விசா
இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களுக்கு இலவசமாக டூரிஸ்ட் விசா வழங்கும் திட்டத்தை இலங்கை அரசு நீட்டித்துள்ளது. இதன்படி இந்தியா, சீனா,ரஷ்யா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கைக்கு சுற்றுலா வரும்போது இலவசமாக விசா பெற்றுக் கொள்ளலாம் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. சுற்றுலா துறையை நம்பி இருக்கும் இலங்கை, சுற்றுலா பயணிகளை ஈர்க்க, இவ்வாறு அறிவித்துள்ளது.
தாய்லாந்து விசா
தாய்லாந்து அரசு இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கான விசா விலக்கு திட்டத்தை நீட்டித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால், 2024 நவம்பர் 11ம் தேதி வரை, இந்திய சுற்றுலாப் பயணிகள் விசா இல்லாமல் தாய்லாந்தை சுற்றி பார்க்கலாம். இந்திய பயணிகளுக்கான விசா சம்பந்தமான கட்டுப்பாடுகளை நீக்குவதன் மூலம் அதிக சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்றும், இதன் மூலம் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்று அந்நாட்டு அரசு கருதுகிறது. தாய்லாந்தில் பாங்காக் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக இருந்தாலும், அதையும் தாண்டி மிக அழகான பல இடங்கள் உள்ளன.
ஷெங்கன் விசா
ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை பல வருடங்களாகவே தொடர்ந்து அதிகரித்து வரும், நிலையில், ஷெங்கன் என கூறப்படும் 29 ஐரோப்பிய நாடுகளுக்கு எளிதாகச் செல்ல உதவும் வகையில் மல்டிபிள் என்ட்ரி அனுமதியுடன் கூடிய ஷெங்கன் விசாவிற்கு இந்தியர்கள் (Schengen Visa For Indians) விண்ணப்பம் செய்யலாம் என கடந்த மாதம் ஐரோப்பா கூறியது. இந்தியாவில் வசிக்கும் இந்திய குடிமக்கள், இனி நீண்ட கால, பல நுழைவு ஷெங்கன் விசாக்களை பெறலாம். எனவே சுற்றுலா செல்வோர் ஷெங்கன் விசா பெற்று பயனடையலாம்.
மேலும் படிக்க | ஐரோப்பாவிற்கு படை எடுக்கும் இந்தியர்கள்... ஷெங்கன் விசா துறை வெளியிட்ட தகவல்!
ஜப்பான் விசா
இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்க்க இந்தியர்களுக்கான இ-விசா நடைமுறையை ஜப்பான் தொடங்கியுள்ளது. உலகின் மிக முக்கியமான கலாச்சார மையங்களில் ஒன்றான ஜப்பானிற்கு பயணிக்க விரும்பும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான விசா செயல்முறையை முழுமையாக எளிமைபடுத்தியுள்ளது. விசாக்கள் டிஜிட்டல் முறையில் வழங்கப்படுகின்றன. இதன் கீழ் சுற்றுலாப் பயணிகள் ஒரு முறை நாட்டிற்குள் நுழைய அனுமதிப்படுகிறார்கள். இதில் 90 நாட்கள் வரை தங்கலாம்.
துபாய் விசா
பிப்ரவரியில் தொடங்கப்பட்ட துபாயின் புதிய விசா நடைமுறை இப்போது இந்தியப் பயணிகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கும் விசாவை வழங்க அனுமதிக்கிறது. மல்டிபிள் எண்ட்ரி வசதியும் கிடைக்கும். மேலும், 90 நாட்கள் வரை தங்கவும் அனுமதி உண்டு. ஐந்தாண்டு காலத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் துபாய் பயணம் செய்ய விசா அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது தங்கள் குடும்பங்களைச் சந்திக்க விரும்பும் இந்தியர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
மேலும் படிக்க | தாய்லாந்திற்கு சுற்றுலா செல்ல திட்டமா? விசா தொடர்பான விதிகளில் மாற்றங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ