புதுடெல்லி: ரயிலில் பயணிப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இப்போது உங்களுக்கு திடீரென்று பயணிக்க வேண்டிய அவசர நிலை ஏற்பட்டு, முன்பதிவு டிக்கெட் இல்லை என்றால், பீதி அடைய வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் இப்போது, அவசர காலத்தில் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்யலாம். முன்னதாக, இதற்காக, தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி மட்டுமே இருந்தது. ஆனால் அதிலும் டிக்கெட் பெறுவது எளிதல்ல. அத்தகைய சூழ்நிலையில், ரயில்வே உங்களுக்கு அவசர கால பயணத்திற்காக மேலும் ஒரு வசதியை அளிக்கிறது. இதன் கீழ் நீங்கள் முன்பதிவு இல்லாமல் பயணிக்க முடியும்.
பிளாட்பார்ம் டிக்கெடில் பயணம் செய்தல்
அவசர காலத்தில், உங்களிடம் முன்பதிவு டிக்கெட், இல்லையென்றால், நீங்கள் நேராக ரயில் நிலையம் சென்று, பிளாட்ஃபார்ம் டிக்கெட்டை மட்டுமே எடுத்துக்கொண்டு ரயிலில் ஏறலாம். அதை வைத்துக் கொண்டு டிக்கெட் பரிசோதகரிடம் ( TTE) சென்று டிக்கெட்டுகளை மிக எளிதாகப் பெறலாம். இந்திய ரயில்வே (Indian Railway) இதற்கேற்ப விதிகளை திருத்தியுள்ளது.
இருக்கை காலியாக இல்லாவிட்டாலும் பயணம் செய்ய வழி இருக்கிறது
அவசர காலத்தில் ரயிலில் இருக்கை காலியாக இல்லாவிட்டால், TTE உங்களுக்கு ரிசர்வ் இருக்கை கொடுக்க மறுக்கலாம். ஆனால், பயணத்தை தடுத்து நிறுத்த முடியாது. உங்களிடம் முன்பதிவு இல்லையென்றால், இதுபோன்ற சூழ்நிலையில், பயணிகளிடமிருந்து ரூ .250 அபராதம் வசூலிக்கப்பட்டால், பயணத்தின் மொத்த கட்டணத்தை செலுத்தி டிக்கெட் (Railway Ticket) பெற வேண்டும். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ரயில்வேயின் இந்த முக்கியமான விதிகள்.
ALSO READ | Indian Railways: Confirm டிக்கெட் தொலைந்துவிட்டாலும் பயணிக்கலாம் தெரியுமா?
பிளாட்ஃபார்ம் டிக்கெட் பயணிகளுக்கு ரயிலில் ஏற உரிமை உண்டு. ரயில் இதன் மூலம், பயணிகள் தான் பிளாட்பார்ம் டிக்கெட்டை எடுத்த இடம், புறப்படும் ரயில் பயணத்திற்கான கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் வசூலிக்கும்போது, புறப்படும் நிலையமும் அதே நிலையமாகக் கருதப்படும். மேலும் சிறப்பான விஷயம் என்னவென்றால், நீங்கள் பயணம் செய்யும் அதே வகுப்பின் கட்டணத்தையும் நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும்.
மேலும் ஒரு விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எந்தவொரு காரணத்தினாலும் உங்கள் ரயிலை தவறவிட்டால், அடுத்த இரண்டு நிலையங்கள் வரை TTE உங்கள் இருக்கையை யாருக்கும் ஒதுக்க முடியாது. அதாவது, அடுத்த இரண்டு நிலையங்களில், ரயிலுக்கு முன்பாக வந்து ரயிலை பிடிக்க முயற்சி செய்யலாம். ஆனால் இரண்டு நிலையங்களுக்குப் பிறகு, TTE ஏதேனும் ஒரு பயணிக்கு டிக்கெட் ஒதுக்கலாம்.
ALSO READ: IRCTC Booking Update: மோசடிகளை தடுக்க முக்கிய மாற்றம் விரைவில்.!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR